Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

26 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு 2 ஏக்கர் மாநகராட்சி இடம் மீட்பு

Print PDF

தினகரன் 26.08.2010

26 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு 2 ஏக்கர் மாநகராட்சி இடம் மீட்பு

கோவை, ஆக. 26: கோவை யில் 26 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மாநகராட்சி இடம் இரண்டு ஏக்கர் மீட்கப்பட்டது. கோவை மாநகர் 14வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் மாநகராட்சிக்கு சொந்த மான 1.91 ஏக்கர் ரிசர்வ் சைட் உள்ளது. அப்பகுதி யில் கடந்த 1984ம் ஆண்டு வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டபோது பொது பயன்பாட்டுக்காக இந்த இடம் ஒதுக்கப்பட்டது.

இது, மாநகராட்சி வசம் இருந்தது. இதை, அதே பகுதி யை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கம் என்ற பெயரி லும், விநாயகர் கோயில் என்ற பெயரிலும், தென்னந்தோப்பு, மாந்தோப்பு என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செ ய்து அனுபவித்து வந்தனர். 20 சென்ட் பரப்பளவில் விநா யகர் கோயில், அதையொ ட்டி மடப்பள்ளி கட்டப்பட்டு மின்வாரியத்திடமிரு ந்து மின் இணைப்பும் பெறப் பட்டுள்ளது. இதை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண் டும் என கோயில் நிர்வாகத்தினர் மற்றும் குடியிருப் போர் சங்கத்தினருக்கு மாநகராட்சி சார்பில் இருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட் டது. ஆனால், எவ்வித பதி லும் இல்லை. இதையடுத்து, அந்த இடத்தை அதிரடியாக மீட்கும்படி ஆக்கிரமிப்பு அகற்றும் குழுவுக்கு மாநகராட்சி கமிஷனர் அன் சுல் மிஸ்ரா உத்தரவிட் டார்.

அதன்படி, இக்குழுவில் இடம்பெற்றுள்ள உதவி நகரமைப்பு அலுவலர்கள் தலைமையில் சுமார் 25க் கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு புல் டோசர் இயந்திரத்துடன் அதிரடியாக உள்ளே புகுந்தனர். இரும்புகம்பி வேலி, கோயில் மடப்பள்ளி, தென்னந்தோப்பு, மாந்தோப்பு வேலி ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்தினர்.

கோயிலை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் அதை மட்டும் அப்புறப்படுத்தவில்லை. இந்த பணியை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா நேற்று ஒரு மணி நேரம் நேரில் பார்வையிட்டார்.

இதுபற்றி அன்சுல் மிஸ் ரா கூறுகையில், ‘‘மாநகராட்சி ரிசர்வ் சைட் 1.91 ஏக்கர் கடந்த 26 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கொடுத்த அவகாசத்தை பயன்படுத்தி அவர் களாக அப்புறப்படுத்திக்கொள்ளவில்லை. அதனால், அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. இங்குள்ள மரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படும் என்பதால் அதை சேதப்படுத்தவில் லை. மீட்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.15 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்படும். மேலும், மேல்நிலை குடிநீர் தொட்டி யும் கட்டப்படும்.

கோவை மாநகராட்சி எல்லைக்குள் 611 இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் ரிசர்வ் சைட் உள் ளது. இவற்றில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ரிசர்வ் சைட்கள் 99 சதவீதம் மீட்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள ரிசர்வ் சைட் களும் படிப்படியாக மீட்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும்’’ என்றார்.