Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழா பேனர் அகற்றம்

Print PDF

தினமலர் 31.08.2010

விழா பேனர் அகற்றம்

ஊட்டி : ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த, விநாயகர் சதுர்த்தி விழா பேனர் அகற்றப்பட்டது.ஊட்டி ஐந்துலாந்தர் பகுதியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. "பேனருக்கான முறையான அனுமதி வாங்கவில்லை' எனக்கூறி, போலீசார் அகற்ற வந்தனர். இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர், "பேனரை அகற்றக் கூடாது; இதற்கான அனுமதிக்கு டி.எஸ்.பி., யிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது' என கூறினர்; இவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊட்டி நகர திட்ட அலுவலர் சவுந்தரராஜன், "இப்பகுதியில் பேனர் வைக்க, நகராட்சிக்கு அனுமதி கடிதம் வழங்கவில்லை; இதற்கான கடிதம் கொடுத்தால், அனுமதி வழங்கப்படும். பின், பேனர் வைத்துக் கொள்ளலாம்,'' என்றார். இதன்பின் பேனர் அகற்றப்பட்டது.

இந்து முன்னணியின் கோவை, நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கூறுகையில், ""ஊட்டியின் பல இடங்களில், விதிமுறை மீறி, பல மாதங்களாக பேனர் கள் வைக்கப்படுகின்றன; இவைகளை போலீ சார் கண்டுகொள்வதில்லை. டி.எஸ்.பி., அசோக்குமாரிடம் முறையான அனுமதி கடிதம் கொடுத்தும், எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நிர்வாகிகளிடம் ஆலோசித்து, மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட உள்ளோம்,'' என்றார்.