Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சோமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம் பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன் 09.09.2010

சோமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் அகற்றம் பெங்களூர் மாநகராட்சி நடவடிக்கை

பெங்களூர், செப். 9: பெங்களூர் அல்சூர் சோமேஸ்வரர் கோயிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிரடியாக அகற்றியுள்ளது. அல்சூரிலுள்ள சோமேஸ்வரர் கோயில் பெங்களூரின் பழமையான சிவாலயங்களில் ஒன்றாகும். கடந்த மாதம் திடீரென சோமேஸ்வரர் ஆலயத்திற்கு முதல்வர் எடியூரப்பா சென¢றார். அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட முதல்வர் கோயிலைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை பார்த்து அதிர் ச்சியடைந்தார்.

மாநிலத்திற்கு செழுமை ஏற்பட வேண்டும் என்றால் பழமையான கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று ஜோதிடர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளதாகவும் மாநிலத்திலுள்ள பழமையான கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அப்போது அறிவித்தார். சோமேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் திடீரென பிபிஎம்பி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சோமேஸ்வரர் கோயில் இருக்கும் பகுதிக்கு வந்தனர். துணை கமிஷனர் சந்திரசேகர் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கோயிலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை கிரேன்களின் உதவியுடன் பிபிஎம்பி அதிகாரிகள் இடித்து தள்ளினர். இதை எதிர்பார்க்காத வர்த்தகர்கள் மாநகராட்சியின¢ நடவடிக்கையை எதிர்த்து கோஷமிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் போலீசார் வர்த்தகர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மதியம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது. சிறிதும் பெரிதுமாக பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இந்த நடவடிக்கையில் அகற்றப்பட்டன. பெண்கள் கிரேன்களின் முன்பு சென்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுக்க முயன்றனர். பெண் போலீசார் அவர்களை தூக்கிச் சென்றனர். மதியம் வரை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் மூலம் சுமார் 50 கடைகள் இடித்து தள்ளப்பட்டன. அப்பகுதியில் இனியும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘திடீரென முன்னறிவிப்பு எதுவும் செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை இடித்து தள்ளிவிட்டனர். அதுவும் தற்போது அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் கடைகளை அகற்றியதால் எங்களது வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வயிற்றுப்பிழைப்புக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது‘ என்று கடைகளை இழந்த வர்த்தகர்கள் பலர் தெரிவித்தனர்.