Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட தாராவி பி.எம்.ஜி.பி. காலனியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு

Print PDF

தினகரன் 17.09.2010

குடிசை மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட தாராவி பி.எம்.ஜி.பி. காலனியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு

தாராவி, செப்.17: தாராவி புனரமைப்பு திட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், இந்த குடிசைப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஒரே இடமான பி.எம்.ஜி.பி. காலனி ஏற்கனவே சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தாராவியில் 90 அடி சாலை மற்றும் சயான்& தாராவி லிங்க் ரோடு அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகளுக்காக பி.எம்.ஜி.பி. காலனி கட்டப்பட்டது. இந்த காலனியில் 225 சதுர அடியில் 4,800 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதமரின் உதவித்தொகையைக் கொண்டு இந்த வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் இங்குள்ள 80 சதவீதம் வீடுகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியமான மஹாடாவட்டாரம் ஒன்று இது பற்றி கூறுகையில், "மஹாடா அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வீட்டு தரகர்கள் சிலர் இந்த காலனியில் உள்ள வீடுகளை ரூ10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரை விற்பனை செய்துள்ளனர் என்றது.

பெயரை வெளியிட விரும்பாத மஹாடாஉறுப்பினர் ஒருவர் இப்பிரச்னை பற்றி கூறுகையில், "மஹாடாகட்டும் வீடுகள் தற்போது லாட்டரி குலுக்கல் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளை விற்பனை செய்வதற்கு தரகர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் மஹாடாஅறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் அதன் புழக்கடையிலேயே இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடந்துள்ளனÓ என்றார். ‘மஹாடாவின் விஜிலன்ஸ் இலாகாவுக்கு இந்த முறைகேடு பற்றி தெரியாது என கூறப்படுகிறது. ஆனால், பி.எம்.ஜி.பி. காலனி உட்பட மஹாடாவின் பல டிரான்சிட் கேம்ப்களில் இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் நடந்து வருவதை அதன் பழுதுபார்ப்பு மற்றும் மறுகட்டமைப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 1985ம் ஆண்டு மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி தாராவியில் பாத யாத்திரை மேற்கொண்ட சமயத்தில் தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ100 கோடி உதவித்தொகை அறிவித்தார். இந்த தொகையை கொண்டு பி.எம்.ஜி.பி. காலனி கட்டப்பட்டது. தற்போது மஹாடாவின் உதவித் தலைவராக இருக்கும் கவுதம் சாட்டர்ஜி, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கேற்றார். இன்னும்கூட அவர் மஹாடாதலைவர் பொறுப்பில் இருந்து வரும் நிலையில், அவரிடம் பணியாற்றும் அதிகாரிகளோ இது போன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.