Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பை அகற்றிய கிராமத்தினர்

Print PDF

தினகரன் 23.09.2010

ஆக்கிரமிப்பை அகற்றிய கிராமத்தினர்

பெ.நா.பாளையம்,செப்.23: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் இந்த ஆண்டுஅண்ணாமறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.77 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 4,5,9 ஆகிய வார்டுகளில் கான்கிரீட் மற்றும் தார் சாலைகள் அமைக்க ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4வது வார்டில் சாரங்க நகரில் இருந்து திருமலைநாயக்கன்பாளையம் வரையுள்ள சாலை தார்சாலையாக மாற்றப்பட உள்ளது. இந்த ரோடு ஓரத்தில் இருபுறமும் ஆக்கிரமித்து வீடுகளின் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. பேரூராட்சி தலைவர் ரங்கசாமி, செயல் அலுவலர் கல்யாண சுந்தரம், கவுன்சிலர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக சர்வே எடுத்தனர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து 5,9 வது வார்டிலும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.இல்லையேல் ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றி அதற்குரிய செலவை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்காக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடிக்க வசதியாக சர்வே எடுக்கப்பட்டது.