Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரை அழகுபடுத்த நாளை மறுநாள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு பண்ருட்டி, நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்

Print PDF

தினகரன் 23.09.2010

நகரை அழகுபடுத்த நாளை மறுநாள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு பண்ருட்டி, நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்

பண்ருட்டி, செப். 23: நகரை அழகுபடுத்த நாளை மறுநாள் பண்ருட்டி, நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும்பணி துவங்கப்படும் என நேற்று நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிதம்பரம், வடலூர், விருத்தாசலம் ஆகிய நகரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகரங்களை அழகுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், அண்ணாகிராமம், தொரப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செல்வம், தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பண்ருட்டி சுந்தரி, கடலூர் நடனசபாபதி, நெல்லிக்குப்பம் நகராட்சி கட்டட ஆய்வாளர் குமரவேல், பி.எஸ்.என்.எல் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும். அண்ணா கிராமம், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டும். பண்ருட்டியில் கடலூர், சென்னை, கும்பகோணம், சேலம் மெயின்ரோடு மற்றும் காந்திரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரடி கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.

ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தானாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி காவல்துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்ருட்டி பிரதான சாலைகளில் உள்ள சாலையோர பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்தால் தானாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். வரும் 25, 26ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியினரின் தலையீடும் இல்லாமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அமைச்சர் ஆலோசனை பேரில் பண்ருட்டி நகரில் ஆக்கிரமிப்புகள் இல்லாத நகரமாக்க நடவடிக்கை எடுக்க கூறியதையடுத்து தொய்வில்லாமல் பணிகள் நடை பெறும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் என் னென்ன வகையில் அழகுபடுத்தப்படும் என்ற திட்ட அறிக்கையை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் என் னென்ன வகையில் அழகுபடுத்தப்படும் என்ற திட்ட அறிக்கையை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிர மிப்புகளை, தாங்களாகவே அகற்ற முடிவு செய்துள்ளனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லிக்குப்பம் சப்& இன்ஸ்பெக்டர் அன்பரசு, வருவாய் ஆய்வாளர் பூபாலசந்திரன் உட்பட பலர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.