Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்புகள் அகற்றம் கடலூர்&நெல்லிக்குப்பம் சாலையில் பொதுமக்கள் வரவேற்பு

Print PDF

தினகரன் 24.09.2010

ஆக்கிரமிப்புகள் அகற்றம் கடலூர்&நெல்லிக்குப்பம் சாலையில் பொதுமக்கள் வரவேற்பு

கடலூர், செப். 24: கடலூரில் நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. கடலூர் நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சாலைகளையும், சாலையோரத்தில் பொது மக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதைகளிலும் ஆக்கிரமிப்பாளர்கள் கடை கள் நடத்தி வருகின்ற னர். இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு சென்றன.

இந்நிலையில் கடந்த வாரம் இது தொடர்பாக பதில் அளித்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அறிவித்தார்.

மேலும் நடைபாதைகள் நடப்பவர்களுக்கு சொந்தம் என்றும் அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சீத்தாராமனின் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடலூர்& சித்தூர் சாலையில் டவுன்ஹால் தொடங்கி நெல்லிக்குப்பம் சாலையில் கோண்டூர் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி னர்.

முன் கூட்டியே அகற்றும்படி தெரிவித்திருந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றா மல் இருந்த டீ கடைகள், சிற்றுண்டி உணவகங்கள், பெட்டிக்கடைகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கட்டுமானம் உள்ளிட்ட பொருட் கள் அனைத்தும் பொக் லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறி யாளர் நடனசபாபதி, உதவிபொறியாளர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில் சாலை ஆய்வாளர்கள் பாபு, சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், சாலைப்பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகள் அகற் றும் நடவடிக்கையின் போது வருவாய்த்துறை, கடலூர் நக ராட்சி, காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இன் றும் கடலூர்& சித்தூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை தொடரும் என நெடுஞ்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடலூர்& நெல்லிக்குப்பம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைகளை பொது மக்கள் வரவேற்றுள்ளனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சாலைகள் விசால மாகவும் போக்குவரத்திற்கு பயனுள்ள விதத்தில் உள்ளதாகவும் நடைபாதைகள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு பொது மக்கள் நடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.