Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி பாளை மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 28.09.2010

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி பாளை மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாளை மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

நெல்லை, செப். 28: பாளை மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த நடைபாதை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மாநகராட்சி லாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளை மார்க்கெட்டில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இங்கு காய்கறி, பலசரக்கு, பழக்கடை உள்ளிட்ட பல் வேறு கடைகள் உள்ளன.

இக்கடைகளை தவிர பொதுமக்கள் சென்றுவரும் நடைபாதையில் சிலர் அனுமதியின்றி கடைகளை வைத்து விற்பனை செய்துவந்தனர். இதனால் உள்பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியிலும் கடைகளை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திவந்தனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இளநிலை பொறியாளர்கள் ஜெய்கணபதி, கருப்பசாமி, பைஜூ, சுகாதார ஆய்வாளர்கள் கல்யாணசுந்தரம், சாகுல்ஹமீது, பெரு மாள், உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் மற்றும் முருகன், பாலசுப்பிரமணி யன் ஆகியோர் துப்புரவு பணியாளர்கள் மூலம் மார்க்கெட்டில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைவைத்திருந்தவர்களின் பொருட் களை அகற்றி லாரிகளில் ஏற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரி வித்து வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பறிமுதல் செய்த பொருட்களை தர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி லாரியை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் மற் றும் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அகற்றப்பட்ட பொருட்களை மாநகராட்சியினர் எடுத்துச் சென் றனர்.

இதனால் அப்பகுதி யில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வியாபாரிகள் எதிர்ப்பு கண்டும் காணாமல் சென்ற கமிஷனர்

பாளை மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொருட்களை ஏற்றி சென்ற வேனை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். அவ்வழியாக போலீஸ் கமிஷனர் அபயகுமார் சிங் அதிரடிப்படை வேனில் சென்றார். அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. அதிரடிப்படை வேனிலிருந்த போலீசார் கமிஷனர் வந்த வேன் செல்ல போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதைதொடர்ந்து வியாபாரிகள் அதிகாரிகளின் பிரச்சனையை கண்டும் காணாமல் போலீஸ் கமிஷனர் வேன் பாய்ந்து சென்றது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.