Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகர்கோவிலில் ஓடை புறம்போக்கில் ஆக்ரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன் 05.10.2010

நாகர்கோவிலில் ஓடை புறம்போக்கில் ஆக்ரமிப்பு அகற்றம்

நாகர்கோவில், அக். 5: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடை புறம்போக்கில் ஆக்ரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. நாகர்கோவிலில் முக்கிய பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு இடங் கள் ஆக்ரமிப்பில் உள்ளன. டதி பள்ளி எதிர்புறம் சுமார் அரை கீ.மீதூரம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சிக்கி இருந் தது. இப்பகுதியில் ஆக்ரமிப்புகளை அகற்ற அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் லால் மோகன், நுகர்வோர் பாது காப்பு சங்க தலைவர் ஸ்ரீராம் உற்பட பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்திலும் இது பற்றி பேசப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும் நீர் நிலை களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஆக்ரமிப்பு இடங்களை மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி வருவாய்த்துறை, பொது பணித்துறை நீர்வள ஆதாரபிரிவு மற்றும் நகராட்சி அதிகாரிகள் அடையாளப்படுத்தினர். நேற்று முன் தினம் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் சிலர் தாங்களாகவே ஆக்ரமிப்புகளை அகற்றினர். அகற்றப்படாத பகுதிகளை நேற்று காலை தாசில்தார் நாகராஜன் பொதுபணித்துறை (நீர்வள ஆதாரபிரிவு) உதவி செயற்பொறியாளர் மலையரசன் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் அகற்றினர். இதில் 11 வீடுகள் மற்றும் 2 கட்டிடங்கள் அகற்றப்பட்டது.