Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் நடைபாதை ஆக்கிரமிப்பில் 3,973 வழிபாட்டு ஸ்தலங்கள்

Print PDF

தினகரன் 20.10.2010

தூத்துக்குடியில் நடைபாதை ஆக்கிரமிப்பில் 3,973 வழிபாட்டு ஸ்தலங்கள்

தூத்துக்குடி, அக்.20: தூத்துக்குடி நகரில் அரசுக்கு சொந்தமான நடைபாதைகளில் 3,973 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி நகர பகுதியில் ஆங்காங்கு சாலைகளை ஆக்கிரமித்து வணிக நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் அதிகாரிகள் அவற்றை அகற்றாமல் காலம் கடத்தி வருகின்றனர். வழிபாட்டு தலங்களை காரணம் காட்டி சில வணிக நிறுவனங்களும், தனிநபர்களும் தப்பித்து கொள்கின்றனர்.

எனவே சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றவேண்டுமென்பதில் நீதிமன்றமும் உறுதியாக உள்ளது.

இதற்கிடையே தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலரும் முன்னாள் கதர்வாரிய உறுப்பினருமான பாலகிருஷ்ணன் என்பவர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலரிடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிவிக்குமாறு மனு அளித்தார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுப்படி எத்தனை வழிபாட்டு தலங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பதையும் தூத்துக்கடி நகரில் அரசுக்கு சொந்தமான நடைபாதையில் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் விபரங்களையும் தெரிவிக்குமாறு தகவல்கேட்டார். அதற்கு மாவட்ட பொது தகவல் அலுவலர் அளித்துள்ள பதிலில்,

தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிந்தது இதற்கிடையே தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலரும் முன்னாள் கதர்வாரிய உறுப்பினருமான பாலகிருஷ்ணன் என்பவர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அலுவலரிடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிவிக்குமாறு மனு அளித்தார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுப்படி எத்தனை வழிபாட்டு தலங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பதையும் தூத்துக்கடி நகரில் அரசுக்கு சொந்தமான நடைபாதையில் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் விபரங்களையும் தெரிவிக்குமாறு தகவல்கேட்டார். அதற்கு மாவட்ட பொது தகவல் அலுவலர் அளித்துள்ள பதிலில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி 2 இந்து கோயில்களும், ஒரு கிறிஸ்தவ ஆலயமும் அகற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரில் அரசுக்கு சொந்தமான நடைபாதையில் 3,571 கோவில்களும், 266 சர்ச்சுகளும், 54 மசூதிகளும், மற்றவை 82 உட்பட 3,973 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.