Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது

Print PDF

தினகரன் 21.10.2010

ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது

கோவை, அக்.21:கோவை அருகேயுள்ள சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக அரசு நிலத் தில் ஓட்டல் நடத்தியும், வீடு கட்டி இருந்ததும் கண்டுபிடித்து பேரூராட்சி நிர் வாகம் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தியது.

சர்க்கார் சாமக்குளம் பேரூ ராட்சி 10வது வார்டு குரும்ப பாளையத்தில் வில் லேஜ் நகர் உள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் சைட்டில் கடந்த 15 ஆண்டுகளாக தனி யார் ஒருவர் ஆக்கிரமித்து ஓட்டல் நடத்தி வந்தார்.

அதே போல் இப்பகுதியில் பேரூராட்சி குறுக்கு சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்து வந்தனர். வீட்டிற்கு பேரூராட்சி நிர்வாகமே பிளான் அப்ரூவல் கொடுத்து குடிநீர் குழாய் மற் றும் மின் இணைப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் கலெக்டர் உத்தரவுப்படி பேரூராட்சி யில் உள்ள அரசு இடங்களில் தனியார் ஆக்கிரமிப்பு பட்டி யல் தயாரித்த போது ஆக்கிரமிப்பு நில விபரங்கள் தெரிய வந்தது.

பேரூராட்சி நிர்வாகத் தின் நடவடிக்கையால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட் டீஸ் அனுப்ப உடனடியாக அரசு நிலம் 11 சென்ட் முதல் கட்டமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம். பேரூராட்சி தலைவர் கவிதா, செயல் அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கூறுகை யில், ‘பேரூ ராட்சி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே முன் வந்து அகற்றி கொள்ள வேண் டும்.

பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றினால் அதற்கான கட்டணத்தை உரியவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். கையகப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் விளையாட்டு பூங்கா அமைக்கப்படும்என்றனர். சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி குரும்பபாளையம் அருகேயுள்ள வில்லேஜ் நகரில் 15 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடு இடிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 21 October 2010 09:14