Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினகரன் செய்தி எதிரொலிபுதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் 40 பைக்குகள் பறிமுதல்

Print PDF

தினகரன்              19.11.2010

தினகரன் செய்தி எதிரொலிபுதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் 40 பைக்குகள் பறிமுதல்

தஞ்சை, நவ.19: தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பிளாட்பாரங்களில் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்கது தஞ்சை நகர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் முகமாக அமைந்துள்ளது தஞ்சை புதிய பஸ் நிலையம். ஆனால், இப்புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் பொருள் வைப்பறை குளிர்பான கடையாக மாறியிருந்தது. பயணிகள் சென்றுவருவதற்கான பிளாட்பாரங்களை பழக்கடைகள் ஆக்கிரமித்திருந்தன. அதுமட்டுமின்றி பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் அதிரித்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டுமென கடந்த 16ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார். அதை தொடர் ந்து, தஞ்சை நகராட்சி கமிஷனர் நடராஜன் உத்தரவுப்படி உதவி நகர அமைப்பு அலுவலர் மனோகரன் தலைமையில் நகர அமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 40 கடைகள் அகற்றப்பட்டன. பயணிகள் அமருமிடம் மற்றும் பிளாட்பாரத்தில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த 40 பைக்குகளும் நகராட்சி லாரிகளில் ஏற்றப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதில் 4 பைக்குகளில் காவல் என்று எழுதப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், புதிய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அனுமதியின்றி பயணிகள் அமருமிடம் மற்றும் பிளாட்பாரங்களி¢ல் நிறுத்தப்பட்டிருந்த 40 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள. பைக்குகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பைக்குகளின் ஆர்சி புத்தகம், உரிமையாளர் என்பதற்கான சான்றுடன் வந்தால் மட்டுமே பைக்குகள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.