Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்கள் 7ம் தேதிக்குள் அகற்றம்

Print PDF

தினகரன்                  02.12.2010

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்கள் 7ம் தேதிக்குள் அகற்றம்

ஷிமோகா, டிச. 2: ஷிமோகா மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கட்டியுள்ள வழிப்பாட்டு தலங்களை வரும் 7ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இல்லை என்றால் மாவட்ட நிர்வாகம் நவடிக்கை எடுக்கும் என்று கலெக்டர் பொன்னுராஜ் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாவட்ட சுற்றுலா துறையின் ஒத்துழைப்புடன் வரும் 4, 5 தேதிகளில் ஷிமோகா நகரில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் கிருஷ்ணராஜ தேவராயரின் 500வது முடிச்சூட்டு விழாவை முன்னிட்டு நடத்தி வரும் ஒலி,ஒளி காட்சி சுமார் 1 மணி நேரம் நடத்தப்படும். இதில் விஜயநகர பேரரசர்கள் காலத்தில் நடந்த ஆட்சி முறைகளை இக்கால மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஷிமோகாவில் தற் போது கையில் எடுத்துள்ள பணிகள் முடியும் வரை புதிய திட்டம் தொடங்கப்படாது.

மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கட்டியுள்ள வழிப்பாட்டு தலங்களை அகற்றும்படி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் எந்தெந்த வழிபாட்டு தலங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என்பதை பட்டியல் போட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் ஷிமோ கா நகரில் மட்டும் 38 வழிப்பாட்டு தலங்கள் அகற்றும் பட்டியலில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு 15 கோயில் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மற்ற கோயில்களுக்கு வரும் 7ம் தேதி வரை ஒப்புதல் கொடுக்க காலவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் ஒப்புதல் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இடிக்கப்படும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று மாவட்ட நிர்வாகம் செயல்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.