Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 3.75 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு

Print PDF

தினமணி             02.12.2010

ரூ. 3.75 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு

கோவை, டிச. 1: கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 3.75 கோடி மதிப்பிலான இடம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கோவை, சக்திரோடு, ஆம்னி பேருந்துநிலையம் எதிரே அலமுநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 51 சென்ட் இடம் உள்ளது. இது தனியார்ஆக்கிரமிப்பில் இருந்தது. கடந்த ஆண்டு 26 சென்ட் ஆக்கிரமிப்பு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். 2 மாடி கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.

மீதமுள்ள இடத்தையும் சைட் போட்டு விற்க முயற்சி நடந்தது. இதனையடுத்து மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்தவாரம் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்புவந்தது. அதன்படி மீதமுள்ள இடத்தையும் மீட்க மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர்கள் ரவிசந்திரன், ஜோதிலிங்கம், ஆய்வாளர் சந்திரன் மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை சென்று ஆக்கிரமிப்பில் இருந்த 25 சென்ட் இடத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ. 3.75 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.