Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் ராஜ்குமார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன்               06.12.2010

பெங்களூர் ராஜ்குமார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பெங்களூர்,டிச.6: பெங்களூர் ராஜ்குமார் சாலையில் அமைந்துள்ள கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரிகேட் கேட்வே வணிக வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பெங்களூர் ராஜ்குமார் சாலையில் அமைந்துள்ளது பிரிகேட் கேட்அவே என்ற பிரமாண்டமான வணிகவளாகம். இது சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் 800 கோடி செலவில், 1200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுடனும், 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கார் பார்க்கிங் வசதியுடன் அமைக்கப்பட்டது.

கட்டடம் துவங்கப்பட்ட ஆண்டு முதல், இவை கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து, சட்ட வீதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி நிலைகுழு தலைவர் ஹெச்.ரவீந்திரா தலைமையிலான நிலைகுழு உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆக்கிரமிப்பு நிலங்களை பார்வையிட்டனர்.

வணிக வளாகம் கழிவு நீர் கால்வாய் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அமைந்துள்ளது தெரியவந்தது. இது தெரிந்தும் கட்டிடம் அமைக்க அப்போது உள்ள மாநகராட்சி அதிகாரில் ஒத்துழைப்பு கொடுத்தது தவறான செயலாகும் என்று கூறிய ரவீந்திரா.

வணிகவளாகத்தை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை ஏற்ற அதிகாரிகள் மற்றும் நிலைகுழு உறுப்பினர்கள் இயந்திரங்களைக் கொண்டு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.