Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பில் சர்வீஸ் ரோடுகள் மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர்        20.01.2011

ஆக்கிரமிப்பில் சர்வீஸ் ரோடுகள் மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை:""மதுரையில் சர்வீஸ் ரோடுகள், தெருக்களின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்யப் படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் எச்சரிக்கை செய்துள்ளார்.மதுரை காளவாசல் - பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டின் இருபுறமும் பல கோடி ரூபாய் மதிப்பில் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டன. இவற்றை பயன்படுத்த முடியாதபடி வாகனங்களை நிறுத்துகின்றனர். சர்வீஸ் ரோடு பகுதியில் தனியார் விற்பனை ÷ஷாரூம்கள் உள்ளன. இங்கு வருபவர்கள், சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இடப்பற்றாக்குறை ஏற்படும்போது, பைபாஸ் ரோட்டிலேயே நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.நரிமேடு சத்தியமூர்த்தி தெரு, செல்லூர் பகுதிகளில் சிமென்ட் கலவை வாகனங்களை வரிசையாக நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் காலை, மாலையில் பள்ளி செல்லும் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் நெரிசலில் சிக்குவது வழக்கமாக உள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் பல கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் கால்வாய்கள் கட்டும் பணி, 33 கோடி ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிக்காக வரவழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இயந்திரங்களை சர்வீஸ் ரோடுகள், நரிமேடு, செல்லூர் உள்ளிட்ட ஜனநெருக்கடி மிகுந்த தெருக்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறும்போது, ""சர்வீஸ் ரோடுகள், தெருக்களின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,'' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.