Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுற்றுச்சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு முகப்பேரில் ரூ 10 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் அதிரடி

Print PDF
தினகரன்   08.08.2012

சுற்றுச்சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு முகப்பேரில் ரூ 10 கோடி அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் அதிரடி

ஆவடி, : முகப்பேரில் சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமிக்கப்பட்ட ரூ 10 கோடி அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
 
அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட முகப்பேர் யஸ்வந்த் நகரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் ஆசிஷ் சட்டர் ஜிக்கு புகார் வந்தது.

அவரது உத்தரவின்படி, அம்பத்தூர் மண்டல பொறியாளர்கள் பெருமாள், பாஸ்கரன், தாசில்தார் ராஜு, துணை தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் அந்த இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, உடனடியாக மாநகராட்சி மற்றும் வருவாய் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள சுவரை இடித்து தள்ளினர். ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து 60 சென்ட் அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத் தின் மதிப்பு ரூ 10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  ‘அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.