Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF
தினமணி                 25.03.2013

சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

காட்டுவேகாக்கொல்லை - வேகாக்கொல்லை இடையே சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினர்.

பண்ருட்டி வட்டம், காட்டுவேகாக்கொல்லை - வேகாக்கொல்லை இடையே சாலை உள்ளது.

இதில் 1.5 கி.மீ. தூர சாலையை சிலர் ஆக்கிரமித்து மரம் மற்றும் மண் மேடு அமைத்திருந்தனர். சாலை ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  பாதிக்கப்பட்டனர்.

மேலும் கலூரில் இருந்து ஆயிப்பேட்டை செல்லும் நகர பஸ் தடம் எண் 10, கடந்த 7 மாதங்களாக செல்லாமல் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என கடந்த சில வாரத்துக்கு முன்னர் வேகாக்கொல்லை கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில், பண்ருட்டி வட்டாட்சியர் பத்மாபதி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆதவன், தமிழரசி ஆகியோர் முன்னிலையில், நில அளவர் ஞானமணி அளவீடு செய்தார்.

பின்னர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பஸ் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர். வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி உடனிருந்தார்.

காடாம்புலியூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.