Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

Print PDF
தினமணி       08.04.2013

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு


திருவந்திபுரம் சாலையில் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் வரை சனிக்கிழமை கடலூர் கோட்டாட்சியர் ரா. லலிதா ஆய்வு மேற்கொண்டார். அப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் 4 நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தவறினால் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.