Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாராபுரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் அகற்றம்

Print PDF
தினகரன்         17.04.2013
 
தாராபுரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் அகற்றம்

தாராபுரம்: தாராபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றப்பட்டது. தாராபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி, விநாயகர் கோயில் பகுதியில் சாலையோரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில்நகராட்சி மூலமாக ஆக்கிரமிப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டதில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இயந்திரங்களைக் கொண்டு இடித்து  அப்புறப்படுத்தினார்கள். இது குறித்து ஆணையர் சரவணக்குமார் கூறியதாவது:

நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் என்ஜிஜிஓ காலனி பகுதியில் 30 வருடங்களாக நகராட்சிக்கு சொந்தமான இட த்தில் அனுமதி இல்லாமல் வீடு கட்டபட்டு இருந்தது தெரியவந்தது.

தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் ஒரு வீட்டுக்கு மட்டும் அரசு பட்டா வழங்கி உள்ளது. அந்த பட்டாவை ரத்து செய்யுமாறு வருவாய்துறையிடம் முறையாக கோரப்பட்டுள்ளது. ரத்து செய்த பிறகு அனைத்தும் அகற்றப்படும் என்று கூறினார்.