Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாராபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலம் மீட்பு

Print PDF
தினமணி        18.04.2013

தாராபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான  வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலம் மீட்பு


தாராபுரத்தில் 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஆணையாளர் க. சரவணக்குமார் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு மற்றும் ஒத்துழைப்பு காரணமாக ஆக்கிரமிப்புகள் எவ்வித பாரபட்சமுமின்றி முறையாக தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தாராபுரம் ஐந்துமுக்கு பகுதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான 19 சென்ட் நிலம் 20 ஆண்டுகளாக தனியார் ஒருவரால் ஆக்கிமிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினரின் இடம் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்த ஆணையர் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததை உறுதி செய்தார். இதையடுத்து ஆணையர் தலைமையிலான அலுவலர்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டடங்களை புதன்கிழமை அகற்றி 19 சென்ட் நிலத்தை மீட்டனர்.

இது குறித்து நகராட்சி ஆணையர் க. சரவணக்குமார் கூறியது:

தற்போது மீட்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ.3 கோடி. ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல் பொள்ளாச்சி சாலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நகராட்சிக்குச் சொந்தமான இடமும் மீட்கப்பட்டுள்ளது என்றார்.