Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல்லடத்தில், வீட்டு வசதி வாரிய இடத்தில் இருந்த கோவில் இடித்து அகற்றம்

Print PDF

தினத்தந்தி              29.04.2013

பல்லடத்தில், வீட்டு வசதி வாரிய இடத்தில் இருந்த கோவில் இடித்து அகற்றம்

பல்லடத்தில் வீட்டு வசதி வாரிய இடத்தில் இருந்த விநாயகர் கோவில் இடித்து அகற் றப்பட்டது.

விநாயகர் கோவில்

பல்லடம் செட்டிப்பாளை யம் ரோட்டில் சி.டி.சி. டெப்போ அருகில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்த மான 5.14 ஏக்கர் நிலத்தில் கடந்த 1995, 96, 97-ம் ஆண்டு களில் 69 வீடுகள் கட்டப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. மீதம் உள்ள 1.47 ஏக்கர் நிலம் காலியாக இருந்து வருகிறது. அந்த காலியிடத்தின் ஒரு பகுதியில் கடந்த 1Ñ ஆண்டுகளுக்கு முன் சிலர் விநாயகர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர்.

தற்போது அரசுக்கு சொந்த மான இடங்களை அந்தந்த துறையினர் உரிய பயன் பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்று உயர் அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வீட்டு வசதி துறை அதிகாரிகள் பல் லடத்தில் வீட்டு வசதி துறைக்கு சொந்தமான இடத் தில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற முடிவு செய்தனர். இதற்காக சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சாமி சிலைகள் அகற்றம்

இந்த நிலையில் நேற்று காலை 9Ñ மணி அளவில் விநாயகர் கோவிலை அகற்ற வீட்டு வசதி வாரிய துறை மேற்பார்வை பொறியாளர் சாரங்கபாணி, செயற்பொறி யாளர் சங்கர் லால், உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் பொறியாளர்கள், பல் லடம் தாசில்தார் நல்லசாமி, பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த இடத்தில் குவிந்தனர். கொசவம்பாளை யம் பகுதி மக்களும் அங்கு வந்தனர்.

முதலில் விநாயகர் சிலையை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது பொதுமக்கள் அங்கு வந்து விநாயகர் சிலைகளை தாங் களே எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். அதிகாரிகள் ஒத்துக் கொண்டதால் விநா யகர் சிலை, நந்தி சிலையை பொதுமக்கள் பாதுகாப்பாக எடுத்து வேனில் ஏற்றி அருகில் உள்ள கருப்பராயன் கோவி லில் வைத்தனர். பின்பு பொக் லைன் எந்திரம் மூலமாக கோவில் இடித்து தரைமட்டம் செய்யப்பட்டது. வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காலி இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடு பட்டனர்.

கோவிலுக்கு செல்ல வழி

அப்போது கொசவம்பாளை யம் பகுதி மக்கள், தாங்கள் கருப்பராயன் கோவிலுக்கு செல்வதற்கு அந்த இடத்தில் வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். இதற்கு அதிகாரிகள் முதலில் மறுத்தனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கோவிலுக்கு செல்வதற்கு வழி வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மனு தங்களுக்கு கொடுக்கு மாறும், அதன்பிறகு பாதை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அதிகாரிகள் கூறினார்கள். இதை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து பாதைக்கு இடம் விட்டு கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்றது.

Last Updated on Monday, 29 April 2013 10:25