Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொட்டிவாக்கம் உள்ளிட்ட 3 கிராமங்களில் கடலோர நிலங்கள் வகைபாடு மாற்றம்: சி.எம்.டி.ஏ. அறிவிப்பு

Print PDF

தினமணி 2.12.2009

கொட்டிவாக்கம் உள்ளிட்ட 3 கிராமங்களில் கடலோர நிலங்கள் வகைபாடு மாற்றம்: சி.எம்.டி.. அறிவிப்பு

சென்னை, டிச.1: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும (சி.எம்.டி..) எல்லைக்குள் வரும் கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை கிராமங்களில் கடலோரப் பகுதி நிலங்களின் வகைப்பாடு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சி.எம்.டி.. உறுப்பினர் செயலர் விக்ரம் கபூர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடலோரப் பகுதிக்கான மேலாண்மை திட்டத்தில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்குள் வரும் நிலங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் நகர்ப்புற தன்மையுடன் வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகள் 2}வதாகவும், ஊரக நிலையில் உள்ள பகுதி நிலங்கள் 3}வதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், மற்றும் நீலாங்கரை கிராமங்களில் கடலின் உயர் மட்ட அலை கோட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் வரும் நிலப் பகுதிகள் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் 3}வது வகைபாடில் இருந்து வந்தது.

இப் பகுதிகளில் அதிகரித்து வரும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இங்கு கடலின் உயர் மட்ட அலை கோட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் வரும் நிலங்கள் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் 3}வது மண்டலத்தில் இருந்து 2}வது மண்டலமாக வகைபாடு மாற்றம் செய்யப்படுகிறது.

இதையடுத்து, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை கிராமங்களில் கடலின் உயர் மட்ட அலை கோட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள நிலங்களில் சாதாரண கட்டடங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் இனி 2}வது வகைப்பாட்டிற்கான விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என விக்ரம் கபூர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.