Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குளத்தை அழகுபடுத்த 59 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு :ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர் 18.02.2010

குளத்தை அழகுபடுத்த 59 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு :ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒக்கபிறந் தான் குளத்தை அழகுப் படுத்தும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது.பெரியகாஞ்சிபுரம் ஒக்கபிறந்தான் குளம் தெருவில் ஒக்கபிறந்தான் குளம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெறும்.விழாவின் பத்தாம் நாள் அன்று திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, ஏலவார்குழலி அம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு ஒக்கபிறந்தான் குளத்தை சென்றடைவார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.காமாட்சியம்மன், கன்னியம்மன் ஆகியோரும் அங்கு எழுந்தருள்வர். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக்குளம் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வேகவதி ஆற்றிலிருந்து பிரியும் புத்தேரி கால்வாய் ஒக்கபிறந்தான் குளத்தை சென்றடைகிறது. குளம் நிரம்பியதும் உபரி நீர் மஞ் சள் நீர் கால்வாய் வழியே வெளியேறும்.மஞ்சள் நீர் கால்வாய் காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் செல்கிறது. ஒக்கபிறந்தான் குளத்தில் எப் போதும் தண்ணீர் இருந்ததால் அப்பகுதியில் நிலத் தடி நீர்மட்டம் குறையாமலிருந்தது.குளம் மக்களுக்கு பல் வேறு வகையில் உபயோகமாக இருந்தது. மக்கள் நீராடுவதற்கு வசதியாக குளத் தின் கரைகளில் படிக்கட்டுகள் கட்டப்பட்டிருந்தன.நாளடைவில் குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. பராமரிப்பில்லாமல் குளம் தூர்ந்தது. படிக்கட்டுகள் மணலில் புதைந்தன.காஞ்சிபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அதிகரித்தது.

30
ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் போதுமானதாக இல்லை.இதனால் நகர் முழுவதும் பாதாள சாக்கடையில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேற துவங்கின.அதை சரி செய்ய முடியாததால் பாதாள சாக்கடை கழிவு நீர் நேரடியாக மழை நீர் கால்வாயில் வெளியிடப்பட்டது. அவை நேரடியாக ஒக்கபிறந்தான் குளம் மற்றும் மஞ்சள் நீர் கால்வாயில் கலந்தன.இதனால், ஒக்கபிறந் தான் குளம் மற்றும் மஞ்சள் நீர் கால்வாய் கழிவு நீர் தேக்கமாக மாறியது.. எனவே குளத்தை தூர் வாரி சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.சமீபத்தில் காஞ்சிபுரம் நகரில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக முதல்வர் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். அதில் 59 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒக்கபிறந்தான் குளத்தை சீரமைக்க 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில், குளத்தை தூர் வாரி, குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அப்பகுதியில், மஞ்சள் நீர் கால்வாயை சீரமைத்து இருபுறமும் தடுப்பு சுவர் கட்ட ஒரு கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.

நேற்றுமுன்தினம் ஒக்கபிறந்தான் குளத்தை கலெக் டர் சந்தோஷ்கேமிஸ்ரா நேரில் சென்று பார்வையிட்டார். அவரிடம் புதுப் பிக்கப்பட உள்ள ஒக்கபிறந்தான் குளம் மாதிரி வரைபடத்தை பொதுப் பணித்துறை(நீர்பாசனம்) செயற்பொறியாளர் சிவபெருமாள் காண்பித்தார். அப்போது குளத்தில் தொடர்ந்து கழிவு நீர் கலப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். அதை கேட்ட கலெக்டர் நகராட்சி கமிஷனர் மகாலட்சுமிதேவியிடம் உடனடியாக குளத்தில் கழிவு நீர் கலப் பதை தடுத்து நிறுத்தும்படி உத்தரவிட்டார்.அதன்பின் கலெக்டர், குளத்தில் கழிவு நீர் கலக் கும் பகுதியைப் பார்வையிட்டார்.அப்போது பாரதிநகர் மக்கள் அப்பகுதியில் உள்ள நெல் அரவை மில்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அதிக அளவில் குளத்தில் கலப்பதாக தெரிவித்தனர்.

உடனே கலெக்டர் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு சம்மந் தப்பட்ட நெல் அரவை ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.பொதுமக்களிடம் குப்பைகளை கண்ட இட்தில் கொட்டாதீர்கள். இங்கு குளத்தை தூர் வாரி அழகிய பூங்கா அமைக்க உள்ளோம். அதை நீங்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.பின்னர் அதிகாரிகளிடம் குளத்தை சுற்றியுள்ள ஆக் கிரமிப்பாளர்களிடம் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறுங்கள்.அவர்கள் அகற்றாவிட்டால் துறை ரீதியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப் படுவதுடன், அதற்குரிய செலவு சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுங்கள் என்றார்.

Last Updated on Thursday, 18 February 2010 07:01