Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கெடு! ஆக்கிரமிப்புகளை 7ம் தேதிக்குள் அகற்ற உத்தரவு : காஞ்சி பிள்ளையார்பாளையம் பகுதியில் அதிரடி

Print PDF

தினமலர் 06.03.2010

கெடு! ஆக்கிரமிப்புகளை 7ம் தேதிக்குள் அகற்ற உத்தரவு : காஞ்சி பிள்ளையார்பாளையம் பகுதியில் அதிரடி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் 7ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் நகரை அழகுப்படுத்தவும், பல் வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். இந்நிதியில், குளங்களை தூர் வாரி அழகுப்படுத்துதல், பூங்காக்கள் அமைத்தல், சிமென்ட் சாலைகள் அமைத்தல், நீச்சல் குளம் அமைத்தல், மழைநீர் கால் வாய் அமைத்தல், சாலையோரம் பிளாட்பாரம் அமைத்தல் உட்பட பல் வேறு பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன.சாலைகள் அமைப்பதற் காக நகரில் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் முழுமையாக நடைபெறவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. கடந்த மாதம் ரயில்வே ரோடில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெடுஞ் சாலைத் துறையினர் ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறைக்குட்பட்ட இடத்திலிருந்த கட்டடங்களை இடித்து தள்ளினர். அதன்பின் இடிபாடுகள் அகற்றப்படவில்லை. அப் பகுதி மக்கள் நகராட்சியில் முறையிட்டனர். நகராட்சி அதிகாரிகள், இடிபாடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் தான் அகற்ற வேண்டும் என் றனர்.

இடிபாடுகள் அகற்றப் படாததால் ஆக்கிரமிப்பாளர் கள் மீண்டும் இடத்தை ஆக்கிரமிக்க துவங்கியுள் ளனர். அதன்பின், நகராட்சி சார்பில் காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெரு, பெரிய காஞ்சிபுரம் தேரடி வீதி ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், நகராட்சி ஊழியர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர். சில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். சிலவற்றை அகற்றவில்லை. முதல்வர் ஒதுக்கிய நிதியில் பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம். தெரு, மண்டபம் தெரு பகுதி யில் பல லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது.

சாலை அமைப்பதற்கு முன் தெருவின் இரு புறங் களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, இடத்தை சர்வே செய்து அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகளை அடையாளமிட்டனர். பொதுமக்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் அளித்தனர். நோட்டீசும் வழங்கினர். நேற்று நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி., இயந் திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சி.எஸ்.எம். தெருவிற்கு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள், அவர்களிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டனர்.

அதைத் தொடர்ந்து, நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை 7ம் தேதிக்குள் அகற்றிவிட வேண்டும். அகற்ற மறுத்தால், நகராட்சி சார்பில், 8ம் தேதி ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப் படும் என அறிவித்துவிட்டு புறப்பட்டு சென்றனர்.
நகர் முழுவதும் ஆங் காங்கே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி ஊழியர்கள் பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Saturday, 06 March 2010 10:03