Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமேஸ்வரத்தில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 16.03.2010

ராமேஸ்வரத்தில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் நகரில் பஸ் ஸ்டாண்டில் துவங்கி, தேசிய நெடுஞ்சாலை, நான்குரத வீதிகள், அக்னிதீர்த்த கடற்கரை, கடைத் தெரு, மார்க்கெட் தெரு,ரயில்வே பீடர் ரோடு, வேர்கோடு பகுதிகளில் ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன.

மேலும் ,ரோட்டின் இரண்டு பக்கத்திலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், பொதுமக்கள் தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ராமேஸ்வரம் தீவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ,பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ராமேஸ்வரம் நகரில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் நாளை(மார்ச் 18) அகற்றப்பட உள்ளது. "பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி ,ஒத்துழைப்பு தரவேண்டும்,' என, ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன், நகராட்சி கமிஷனர் போஸ் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Tuesday, 16 March 2010 09:41