Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே 2 கோவில்கள் இடிப்பு

Print PDF

மாலை மலர் 22.03.2010

திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகே 2 கோவில்கள் இடிப்பு

திருச்சி, மார்ச்.22-

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரியில் பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமான 6400 சதுர அடியில் காலி இடம் உள்ளளது. இதன் அருகே சத்துணவு கூடம் உள்ளது. இந்த நிலையில் அந்த நிலத்தில் சிலர் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கிறிஸ்தவ மாதா கோவிலையும் கட்டி வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி உச்சநீதிமன்ற உத்தரவுபடி அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வன்னாரபேட்டை இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைக்க முடிவு செய்தது.

இதற்காக காலி இடத்தை சுற்றி கல்தூணை அமைத்து மாநகராட்சி ஊழியர்கள் வேலி அமைக்க தொடங்கினர்.

இதற்கிடையே அந்த காலி இடத்தில் திருச்சி மாவட்ட தேசிய கண்பார்வையற்றோர் சங்கத்துக்கு, 2400 சதுர அடி இடம் உள்ளது எனவும் அந்த இடத்தை மாநகராட்சி வேலி அமைத்து கைப்பற்ற கூடாது எனவும் பார்வையற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அந்த காலி இடத்தில் குடிசை போட்டு கண் பார்வையற்றோர் 1 வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கண்பார்வையற்றோர் சங்கம் நிலம் தொடர்பான வழக்கு முடிவு 4 நாட்களில் வந்து விடும் என்று கூறப்படுகிறது. எனவே அதை தவிர்த்து மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஆஞ்சநேயர் கோவில், மாதா கோவில் ஆகியவற்றை பொக்லின் எந்திரம் மூலம் மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்ட உதவி பொறியாளர் ராஜஷ் கண்ணா தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Monday, 22 March 2010 11:53