Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜான்சன்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி 05.05.2010

ஜான்சன்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சேலம், ஏப். 4: சேலம் ஜான்சன்பேட்டையில் ஆக்கிரமிப்பு குடிசைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

÷அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

÷இந்நிலையில் இந்த நிலத்தை ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்து வீடு கட்டித் தர அரசு முடிவு செய்தது. ஆனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்கு வீடு கட்டித் தரத் தேவையில்லை என்றும் பட்டா கொடுத்தாலே போதும் என்றும் கூறி வந்தனர்.

÷இந்நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள்-அரசு அதிகாரிகள்-போலீஸôர் கலந்து கொண்ட அமைதிக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

÷இக் கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இப்பகுதியில் உள்ளவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவர்கள் உடனடியாக அங்கு செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷இந்நிலையில் சேலம் ஆர்.டி.ஓ. குழந்தைவேலு, வட்டாட்சியர் சித்ரா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காலை 7 மணிக்கு ஜான்சன்பேட்டை பகுதிக்குச் சென்றனர். மேலும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜான் நிக்கல்சன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

÷இதையடுத்து 6 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அங்கிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. முன்னதாக குடிசைகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்ளிட்ட 8 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

Last Updated on Monday, 05 April 2010 10:23