Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அவிநாசி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் தூள் தூளாகும்: செம்மொழி மாநாட்டை ஒட்டி அகற்ற முடிவு

Print PDF

தினமலர் 06.04.2010

அவிநாசி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் தூள் தூளாகும்: செம்மொழி மாநாட்டை ஒட்டி அகற்ற முடிவு

திருப்பூர்: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, அவிநாசி - கோவை நெடுஞ்சாலை அகலப் படுத்தப்பட உள்ளது. அதற்காக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பொதுமக்கள் குறைகேட்பு கூட் டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நடந்தது. மக்களிடம் இருந்து மனுக்கள் வர தாமதமானதால், துறைகளுக்கு இடையே உள்ள சிறு பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். காங்கயம் பகுதி மின்வாரிய அதிகாரி, 'புதிய மின் இணைப்புக் காக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளன. ஆனால், கம்பங்கள் நடுவதற்கு, பல இடங்களில் நெடுஞ்சாலைத் துறை தடையின்மைச் சான்று வழங்க தாமதம் செய்கிறது,' என்றார்.

கலெக்டர் பதிலளிக்கையில், 'உடனடியாக அனுமதி கொடுத்து விட்டால், நீங்கள் கம்பங்களை நட்டு விடுவீர்கள். பின், அகலப்படுத்தும் போது, நெடுஞ்சாலைத்துறையினர் உங்களுக்கு பணம் செலுத்த வேண் டும். அப்போது கூட, நீங்கள் தாமதம் செய்வீர்கள். எனவே, ஆலோ சனைக்குப்பிறகு, அவர்கள் தடை யின்மைச் சான்று வழங்க நினைத் திருக்கலாம். இருப்பினும், இது குறித்து விரிவாக ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அழகுராஜ் கூறுகையில், 'அவிநாசி ரோட்டில் அகலப்படுத்தும் பணிக்கு இடை யூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும். மின்வாரியத்தின் துரித நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்,' என்றார்.

'பணம் செலுத்தியும் இப்பிரச்னை ஓராண்டாக நீடிக்கிறது. ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, மின்வாரியம் கிடப்பில் போடக் கூடாது. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'இதுமட்டுமல்ல, அவிநாசியில் ரோடு அகலப்படுத்தப்பட உள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க உள்ளதால், அவிநாசி - கோவை ரோட்டில் போக்குவரத்து அதிகரிக்கும். 'எனவே, சாலை விரிவாக்கப் பணியை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும். மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். இப்பணியை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும்,' என்றார் கலெக்டர்.

திடீர் 'ரவுண்ட்ஸ்': குறைகேட்பு கூட்டத்துக்கு வரும் கலெக்டர், தனது சேம்பரில் இருந்து நேரடியாக கூட்ட அரங்குக்கு வந்து விடுவார். ஆனால், நேற்று திடீரென அலுவலக வளா கத்தைச் சுற்றி, பார்வையிட்டார். மனுக்கள் வாங்கும் பகுதி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு சென்ற கலெக்டர், குப்பையை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். கற்கள் குவியலாக இருப்பதைப் பார்த்து, 'மாநகராட்சியிடம் சொல்லி சீராக அடுக்கச் சொல்லுங்கள்; அடுத்த வாரம், மனுக்கள் பெறு வதற்கு முந்தைய தினம், தண்ணீர் ஊற்றி இப்பகுதியைச் சுத்தம் செய்யுங்கள்,' என அறிவுறுத்தினார். அலுவலகத்துக்குள் பொதுமக் களுக்கு குடிநீர் வினியோகம் சரி யில்லை என புகார் எழுப்பப் பட்டிருந்தது. இதையடுத்து, குடிநீர் சுத்திகரித்து வழங்கும் இயந் திரத்தையும் சரிபார்த்து, குடிநீர் குளுமையாக வருகிறதா என பரிசோதித்தார

Last Updated on Tuesday, 06 April 2010 06:06