Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாரத மாதா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் : தாம்பரம் நகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர் 07.04.2010

பாரத மாதா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் : தாம்பரம் நகராட்சி அதிரடி நடவடிக்கை

தாம்பரம் : கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, நகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர்.சானடோரியம் மேம்பாலம் வழியாக, வேளச்சேரி- ஜி.எஸ்.டி., சாலைகளை இணைக்கும் பாரத மாதா சாலை செல்கிறது. 68 அடி அகலம் கொண்ட இச்சாலை, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. சானடோரியம் மேம்பாலத்தின் ஒரு பகுதி இச்சாலையில் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், தினமும் ஏராளமான வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றன.பாரத மாதா சாலையில் 30 அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 120 கட்டடங்கள் கட்டப்பட்டுள் ளன; மேலும், ஆக்கிரமிப்பு கடைகளின் பொருட்கள் சாலையிலேயே குவித்து வைக்கப் பட்டுள்ளன.இதனால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது, தாம்பரம் மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன.இந்த பணிகள் முடியும் போது, பாரத மாதா சாலையை மாற்றுச் சாலையாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு, பாரத மாதா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டடங்கள் இடிக் கப்பட்டன.இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பாரத மாதா சாலையில் 1.17 கி.மீ., தூரத்திற்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்ட பின், சாலை விரிவாக்கம் செய் யப்படும்.மேலும், பழைய ஜி.எஸ்.டி., சாலை, சுத்தானந்த பாரதி தெரு, ராஜாஜி சாலை, காந்தி சாலை, திருநீர்மலை சாலை, கக்கன் சாலை ஆகிய சாலைகளை பராமரிக்கும் பணியை நெடுஞ் சாலைத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது' என்றனர

Last Updated on Wednesday, 07 April 2010 06:32