Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றம்

Print PDF

தினமணி 07.04.2010.

அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றம்

சேலம், ஏப். 6: சேலம் மாநகர் அம்மாப்பேட்டை மண்டலத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினர். சேலம் மாநகரில் அனுமதி பெறாமல் மாநகராட்சி இடங்கள், பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்களால் விபத்துகள் நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலும் மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று கோரிóக்கை விடுக்கப்பட்டது.

÷இதையடுத்து ஆட்சியரின் உத்தரவுப்படி கடந்த 1-ம் தேதி முதல் மாநகரில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். முதல் கட்டமாக சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் பேனர்கள் அகற்றப்பட்டன.

÷இதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக அம்மாப்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாத பேனர்களை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவின் பேரில், இளநிலைப் பொறியாளர்கள் பழனிவேல் ராஜன், கார்த்திகேயன், ஜோஸ் ஆகியோர் தலைமையில் ஏராளமான மாநகராட்சிப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

÷உடையாப்பட்டி பை-பாஸ், அம்மாப்பேட்டை, மணல் மேடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சி இடம், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பேனர்களை அவர்கள் அகற்றி எடுத்துச் சென்றனர்.

Last Updated on Wednesday, 07 April 2010 09:43