Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'கார் ஸ்டாண்ட்' ஆக்கிரமிப்பு: அகற்ற முயன்றதால் பரபரப்பு

Print PDF

தினமலர் 17.04.2010

'கார் ஸ்டாண்ட்' ஆக்கிரமிப்பு: அகற்ற முயன்றதால் பரபரப்பு

உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே 'கார் ஸ்டாண்ட்' ஆக்கிரமிப்பை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, 1972 ம் ஆண்டு டாக்சி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இந்த இடத்திற்கு ஏலம் நடத்தி, ஒப்பந்ததாரர்கள் மூலம் நகராட்சி நிர்வாகம் சுங்கம் வசூலித்து வந்தது. 2002-03ம் ஆண்டில், 6335 ரூபாய்க்கும், 2003 -04ம் ஆண்டில் 6600 ரூபாய்கும் ஏலம் போனது. அடுத்து வந்த ஒப்பந்தகாலத்தில் யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதனையடுத்து, 2005 ஏப்29ம் தேதி நகர மன்ற கூட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்காக, ஏல இனத்திலிருந்து டாக்சி ஸ்டாண்ட் நீக்கப்பட்டு, அதனை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு பயன்படுத்த நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இடத்தை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. 2009ம் ஆண்டு பிப் 3ம் தேதி இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப் பட்ட நிலையில், நகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து டாக்சி ஸ்டாண்ட் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, காலி செய்வதற்கு தடையாணை பெறப்பட்டது. டாக்சி ஸ்டாண்ட்டிற்கு ஒதுக்கப் பட்ட இடத்தை தவிர, காலியாக உள்ள இடத்தையும் கூடுதலாக ஆக்கிரமித்துள்ளதாகவும்,உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நேற்று வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் தலைமையிலான போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சித்தனர்.

நகரமைப்பு அலுவலர் இளங்கோவன், டாக்சி ஸ்டாண்டிற்கு 222 சதுர மீட்டர் இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 63 சதுர மீட்டர் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியாகவும், 32 சதுர மீட்டர் சமையல் கூடமாகவும், 635 சதுர மீட்டர் பரப்பளவு காலி இடமாகவும் உள்ளது. இந்த இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர் . பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு இதனை காலி செய்ய வேண்டும்' என்று கூறினார். இதற்கு டாக்சி ஸ்டாண்ட் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டாக்சி டிரைவர்கள் காலி செய்ய மறுத்ததால், கார்களை வாகனம் மூலம் தூக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், டாக்சி டிரைவர்கள் நகராட்சி கமிஷனர் மற்றும் நகராட்சி தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைடிப்படையில், உடனடியாக காலி இடத்திலிருந்து கார்களை அப்புறப்படுத்திக்கொள்வது, டாக்சி ஸ்டாண்டிற்கு மாற்று இடம் தேர்வு செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, டிரைவர்கள் கார்களை எடுத்துச்சென்றன

Last Updated on Saturday, 17 April 2010 06:42