Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிப் பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

Print PDF

தினமணி 19.04.2010

மாநகராட்சிப் பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி

சேலம்
, ஏப். 18: சேலத்தில் மாநகராட்சிப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிக்க ஞாயிற்றுக்கிழமை முயற்சி நடைபெற்றது. அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

÷சேலம் மாநகராட்சி 35-வது டிவிஷனுக்குள்பட்ட 2-வது புதுத் தெருவில் சுமார் 30 ஆயிரம் சதுர அடி அரசு நிலம் உள்ளது. இங்கு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கட்டுவதற்காக அண்மையில் இந்த நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.40 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ÷

இந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த இடத்தில் முள் கம்பி வேலி அமைக்க முயன்றனர். மேலும் அங்கிருந்த மரத்தை வெட்டிய அவர்கள் வேலி அமைப்பதற்காக கற்களை கொண்டு வந்து இறக்கினர்.

÷இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திமுகவினர் சிலர், மாநகராட்சி பள்ளிக்கூடம் வரக் கூடிய இடத்தில் தனியார் எப்படி ஆக்கிரமிப்பு செய்யலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸýக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீஸôர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்களிடம் பேசி வேலி அமைப்பதை தடுத்தனர். இதையடுத்து அவர்கள் பொருள்களை எடுத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Monday, 19 April 2010 10:41