Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 29.04.2010

தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பூர்: கே.செட்டிபாளையம் பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை, நெடுஞ் சாலைத்துறை நேற்று அகற்றியது.திருப்பூரில் தாராபுரம் ரோடு அகல படுத்தப்பட்டு வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கே.செட்டிபாளையம் வரை அகலப்படுத்தும் பணிக்காக, தாராபுரம் ரோட்டில் உள்ள ஆக்கிர மிப்புகளை எடுப்பது குறித்து, ஒரு வாரத்துக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து, உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.எச்சரிக்கைக்கு பின்பும், கே.செட்டி பாளையம் பகுதியில் எடுக்கப்படாமல் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சுவர் பகுதிகளை இடித்து அகற்றும் பணி நடந்தது; பொக்லைன் மூலம் சுவர்கள் இடிக்கப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர் மேற்பார்வை யில், உதவி கோட்ட பொறியாளர் வத்சலா வித்யானந்தி, உதவி பொறி யாளர் பாலாமணி மற்றும் வருவாய்த் துறை அலுவலர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. திருப்பூர் ரூரல் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கே.செட்டிபாளை யம் வரை தாராபுரம் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள், ரோடு அகலப்படுத்தும் பணிக்காக அகற்றப்படுகின்றன; 15.7 மீட்டர் அளவில் ரோடு அகலப்படுத்தப் படுகிறது. இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்படும்.ரோட்டை ஆக்கிரமித்து உள்ளவர்கள், தங்களுடைய உடைமைகள், பொருட்களை, நெடுஞ்சாலைத்துறை இடிக்க வருவதற்கு முன்பே அகற்றிக்கொள்ள வேண்டும்; இடிக்கும் பணியின் போது, அப்பொருட்களை நெடுஞ்சாலைத் துறை கைப்பற்றி எடுத்துக்கொள்ளும். அவை, திரும்ப வழங்கப்பட மாட்டாது, என்றனர்.

Last Updated on Thursday, 29 April 2010 06:38