Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பக்கிள் ஓடை சீரமைப்பு பணிக்காக தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர்                      06.08.2012

பக்கிள் ஓடை சீரமைப்பு பணிக்காக தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்பு பணியை மேற்கொள்ள அசோக்நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. 9 பெரிய வீடுகள் உட்பட அதிகமான குடிசை வீடுகள் ஜெ.சி.பி மூலம் இடித்து தள்ளப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பக்கிள் ஓடை நான்காம் கட்ட பணிக்காக அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் மதுமதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி உதவி பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்ஜினியர்கள் பிரின்ஸ், காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அசோக்நகர் முதல் மடத்தூர் ரோடு வரை பக்கிள் ஓடை அமைப்பதற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஜெ.சி.பி மூலம் மேற்கொள்ளப்பட்டன.

9 பெரிய வீடுகள், பல தற்காலிக குடிசை வீடுகள், காம்பவுண்ட் சுவர்கள் இடித்து தள்ளப்பட்டன. இது தவிர ராஜீவ்நகரில் ரோட்டை உடைத்து செப்டிக் டேங் அமைத்திருந்ததும் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டிருந்தது. ஆனால் பனிமய மாதா கோயில் திருவிழாவை ஒட்டி பாதுகாப்பு பணிக்கு போலீசார் அனைவரும் சென்று விட்டதால் போலீஸ் பாதுகாப்பு எதுவும் இன்றி மாநகராட்சியினர் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

எந்த ஒரு சிறிய வாக்குவாதம் கூட இல்லாத நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து முடிந்தது. அந்த பகுதி மக்கள் தாமாக முன்வந்து வீட்டில் உள்ள பொருட்களை மட்டும் எடுத்து கொள்வதற்கு அரை மணிநேரம் டைம் கேட்டனர். அந்த டைம் கொடுக்கப்பட்டது. அதற்குள் அவர்கள் பொருட்களை அங்கிருந்து மாற்றினர். அதன் பின்னர் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 

மெரீனா கடைகளில் விளம்பரங்கள் அழிப்பு

Print PDF

தினமலர்                                 05.08.2012

மெரீனா கடைகளில் விளம்பரங்கள் அழிப்பு  

சென்னை :"தினமலர்' சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, மெரீனா கடைகளில் விதி மீறி வரையப்பட்ட தனியார் அலைபேசி விளம்பரங்களை அழிக்கும் பணியில், மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.மெரீனா கடற்கரை மணல் பரப்பை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு, எந்த அனுமதியுமின்றி, உள்ளூர் தாதாக்கள், அரசியல்வாதிகள் ஒத்துழைப்போடு, மென் மேலும் கடைகள் அதிகரித்து வருகின்றன. மெரீனா  ஆக்கிரமிப்பு  கடைகளை, தனியார் அலைபேசி நிறுவனம் கடை முழுவதும், விளம்பரத்தால் பளிச்சிட வைத்தது. தள்ளு வண்டி கடைகள் கூட தப்பவில்லை.

இதுகுறித்து "தினமலர்'  படத்துடன்  செய்தி வெளியிட்டது. இதையடுத்து மெரீனா கடற்கரையில் தனியார்    அலைபேசி   நிறுவன   விளம்பரங்களை   அழிக்கும்  பணியில்   மாநகராட்சி   ஈடுபட்டு வருகிறது.

Last Updated on Monday, 06 August 2012 10:02
 

பேனர்கள் அகற்றம்

Print PDF

தினமணி                    04.08.2012

பேனர்கள் அகற்றம்

கோபி, ஆக.3: கோபியில்  பொதுமக்களுக்கு இடையூறாக  பஸ்  நிலையம்  உள்பட  பல்வேறு பகுதிகளில்   பேனர்கள்,  தட்டிகள்  மற்றும்   ஃபிளக்ஸ்  போர்டுகள்  அதிக  அளவில் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து நகராட்சி  ஆணையருக்குப்  புகார்கள்  வந்தன.


இதன்  அடிப்படையில்   பஸ்   நிலையம்  உள்பட  பல்வேறு  பகுதிகளில்  பல  நாட்களாக வைக்கப்பட்டிருந்த  தட்டிகள்,  பேனர்கள்,  ஃபிளக்ஸ்  போர்டுகள்  நகராட்சிப் ப ணியாளர்களால் அகற்றப்பட்டன. 

நகராட்சி    ஆணையாளர்  ஜான்சன்    கூறுகையில்,   ஆட்சியரிடம்    அனுமதி   பெற்றுத்தான் போர்டுகள் வைக்க  வேண்டும்;  அதுவும்  6 நாள்களுக்கு  மட்டுமே  அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட  நாள்களுக்கு மேல் வைக்கக் கூடாது.  அதையும்  மீறி வைத்திருந்தால் அகற்றப்படும்  என்றார்.

Last Updated on Saturday, 04 August 2012 09:32
 


Page 36 of 204