Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

"குமரி ரதவீதிகளில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்'

Print PDF

தினமணி                                 02.08.2012

"குமரி ரதவீதிகளில் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்'

கன்னியாகுமரி,  ஆக. 1:   கன்னியாகுமரி ரத  வீதிகளில்  உள்ள    ஆக்கிரமிப்புகள்   விரைவில் அகற்றப்படும் என பேரூராட்சித் தலைவி பிரபா வின்ஸ்டன் தெரிவித்தார்.

இது குறித்து  அவர்   செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கன்னியாகுமரி ரத வீதி   தெருக்களில் பல  ஆக்கிரமிப்புகள்  உள்ளன.  இந்த ஆக்கிரமிப்புகள்  அனைத்தும்  பகவதியம்மன்   கோவில் திருவிழாவின் போது தேர் செல்ல வசதியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரூராட்சி   ஊழியர்கள் இதற்கான  நடவடிக்கையில்   விரைந்து  செயல்படுவார்கள்.  மேலும் வறட்சி காரணமாக கன்னியாகுமரி பேரூராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் வழங்குவதில்பிரச்னை இருந்து வருகிறது. குடிதண்ணீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, பேரூராட்சியின் 18 வார்டுகளிலும் குடிதண்ணீர் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் அவர்.

 

ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

Print PDF

தினமணி                                 02.08.2012

ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

திருத்துறைப்பூண்டி, ஆக.1: திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் எதிரே கோவில் குளக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 4 கடைகள் ஆட்சியர் உத்தரவின்பேரில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

திருத்துறைப்பூண்டி நகராட்சிப் பகுதிகளில் உள்ள 32 குளங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான குளங்களுக்கு நீர் வரும் வழி அடைபட்டுவிட்டதால் குளங்களுக்கு தண்ணீர் வந்து, செல்ல முடியவில்லை. இதனால் கடந்தாண்டு வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை 10 நாள்கள் பாதிக்கப்பட்டது.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள்,மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சி. நடராஜன் கடந்த சனிக்கிழமை நகரின் பிரதானப் பகுதிகளில் உள்ள செங்கமலக்குளம், ராமர்மடக்குளம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, அந்தக் குளங்களின் எல்லைகளை வரையறுக்க உத்தரவிட்டார். இதன்படி அவை சர்வே செய்யப்பட்ட பிறகு, ராமர்மடக் குளக்கரையில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சிமென்ட் கூரை அமைத்து, அவற்ரை நிரந்தரக் கட்டடமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் அந்தக் கடைகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் ந. சங்கரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் 4 கடைகளையும் பிரித்து அப்புறப்படுத்தினர்.

 

தஞ்சை நகராட்சியில் ஆக.5-க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்

Print PDF
தினமணி                    31.07.2012

தஞ்சை நகராட்சியில் ஆக.5-க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்


தஞ்சாவூர், ஜூலை 30:   தஞ்சாவூர் நகராட்சியில் ஆக.5-க்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இதுகுறித்து நகராட்சி ஆணையர் பு. ஜானகிரவீந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் நகராட்சி எல்லைக்குள்பட்ட சாலைகள், தெருக்கள், சந்துகள் மற்றும் பொது இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக. 5-க்குள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும்.  அவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத பட்சத்தில் நகராட்சி சிப்பந்திகள், காவல் துறை மற்றும் இதர துறையினருடன் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடுவர்.

மேலும், ஆக்கிரமிப்பை அகற்ற ஆகும் செலவுத்தொகை முழுவதும் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து வசூல் செய்வது மட்டுமன்றி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

அண்மையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட ஆபிரஹாம் பண்டிதர் சாலை, மேம்பாலம் கீழுள்ள பகுதி, கீழவாசல் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டால் மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 


Page 37 of 204