Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஆக்கிரமிப்பில் சர்வீஸ் ரோடுகள் மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர்        20.01.2011

ஆக்கிரமிப்பில் சர்வீஸ் ரோடுகள் மாநகராட்சி எச்சரிக்கை

மதுரை:""மதுரையில் சர்வீஸ் ரோடுகள், தெருக்களின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்யப் படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் எச்சரிக்கை செய்துள்ளார்.மதுரை காளவாசல் - பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டின் இருபுறமும் பல கோடி ரூபாய் மதிப்பில் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டன. இவற்றை பயன்படுத்த முடியாதபடி வாகனங்களை நிறுத்துகின்றனர். சர்வீஸ் ரோடு பகுதியில் தனியார் விற்பனை ÷ஷாரூம்கள் உள்ளன. இங்கு வருபவர்கள், சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இடப்பற்றாக்குறை ஏற்படும்போது, பைபாஸ் ரோட்டிலேயே நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.நரிமேடு சத்தியமூர்த்தி தெரு, செல்லூர் பகுதிகளில் சிமென்ட் கலவை வாகனங்களை வரிசையாக நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் காலை, மாலையில் பள்ளி செல்லும் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் நெரிசலில் சிக்குவது வழக்கமாக உள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் பல கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் கால்வாய்கள் கட்டும் பணி, 33 கோடி ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிக்காக வரவழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இயந்திரங்களை சர்வீஸ் ரோடுகள், நரிமேடு, செல்லூர் உள்ளிட்ட ஜனநெருக்கடி மிகுந்த தெருக்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறும்போது, ""சர்வீஸ் ரோடுகள், தெருக்களின் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்,'' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

எழும்பூர் ரயில் நிலையம் எதிரே சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு

Print PDF
தினகரன்         07.01.2011

எழும்பூர் ரயில் நிலையம் எதிரே சாலையில் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு

சென்னை, ஜன. 7:

எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ளது கென்னத் லேன் பகுதி. இந்த பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்துக்காக 36 அடி அகலத்துக்கு சாலை பகுதி உள்ளது.

ஆனால் அந்த பகுதியில் உள்ள 13 கடைகள் மற்றும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிறிது சிறிதாக சாலையை ஆக்கிரமித்து தற்போது கென்னத் லேன் சாலை 18 அடியாக குறைந்து விட்டது. இதுபற்றி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் கென்னத் லேன் சாலையை பார்வையிட்டனர். அப்போது பாதிக்கும் மேலான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன், அந்த கடைகள், நிறுவனங்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில், ‘எங்களிடம் கருத்து கேட்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை இடிக்க முடிவு செய்துள்ளனர்’ என்று கடந்த 29ம் தேதி ஐகோர்ட்டில் அவர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அப்போது, நீதிமன்றம் “கடைக்காரர்களின் கருத்துக்களை கேட்டு தெரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கலாம் 1396984945 என்று மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவு கிடைக்காததால், மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் நேற்று முன்தினம் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவை கடை உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு இன்றுதான் கிடைத்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டு விரைவில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அனைத்தும் அகற்றப்படும்” என்றார்.
 

தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அதிரடியாக அகற்றம்

Print PDF

தினகரன்       05.01.2011

தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அதிரடியாக அகற்றம்

தூத்துக்குடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டுகள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன.

தூத்துக்குடி,ஜன.5:

தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பல்வேறு முக்கிய பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும் விபத்துகளுக்கு காரணமாகவும் இருப்பதால் இவற்றை வைத்தவர்களே முன்வந்து அகற்ற வேண்டும் எனவும் அதற்காக 24 மணிநேர அவகாசம் வழங்கப்படும் எனவும் கலெக்டர் மகேஷ்வரன் எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள், கமிஷனர் குபேந்திரன் தலைமையில் டிஜிட்டல் பேனர்களை அகற்றும் பணி யில் ஈடுபட்டனர். இதில் 3ம் மைல் பகுதியில் துவங்கி, பாளைரோடு, விவிடி சிக்னல், பழைய பஸ்நிலையம், டபிள்யூஜிசி ரோடு, ஜி.சி ரோடு, சப்& கலெக்டர் அலுவலகம் வரை யில் 120க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்கள் ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டன.

இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், விழாக்கள், விளம்பரங்கள் என அனுமதி பெறாமல் மற்றும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டன.

மேலும் இதுவரையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் ஆக்கிரமித்தும், அனுமதி பெறாமலும் மாதக்கணக்கில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்காக முன்அனுமதி பெறவேண்டும் என காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பலமுறை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் யாருமே மாநகராட்சியிலோ, காவல்துறையிடமோ முன்அனுமதி பெற்று பேனர் வைக்கவில்லை. விளம்பர பேனர் கள் அனைத்துமே முன்அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன என்பது தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்ந்தால் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது முறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

 


Page 40 of 204