Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஜே.பி.நகரில் ரூ.40 கோடி மதிப்பு பி.டி.ஏ நிலம் மீட்பு

Print PDF

தினகரன்              09.12.2010

ஜே.பி.நகரில் ரூ.40 கோடி மதிப்பு பி.டி.ஏ நிலம் மீட்பு

பெங்களூர், டிச. 9: பெங்களூர் ஜே.பி. நகரில் பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமான நிலம் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாநகரில் தெற்கு மண்டலத்தில் உள்ள ஜே.பி.நகர் 8வது ஸ்டேஜ் அடுத்த கொத்தனூர் கிராமத்தில் பி.டி..வுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த 1997ல் கையகப்படுத்திய நிலத்தை இதை சிலர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இதை காலி செய்யும்படி அவர்கள் கேட்டு கொண்டும் கண்டுகொள்ளவில்லை. நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பி.டி.. அதிகாரிகள் நேற்று ஜே.சி.பி. வாகனங்கள் மூலம் சென்று நிலத்தில் அமைக்கப்பட்டிருந்து ஷெட்களை அகற்றி ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டனர்.

 

சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

Print PDF

தினமணி       07.12.2010

சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

வேலூர், டிச. 6: வேலூர் சத்துவாச்சாரியில் 21 ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிர்வாகம் திங்கள்கிழமை காலை அதிரடியாக அகற்றியது. வேலூர், சத்துவாச்சாரி நகராட்சிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகச் சாலைப் பகுதியை ஆக்கிரமித்து 21 கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன.

இக்கடைகளை அப்புறப்படுத்துவதில் 15 ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வந்ததால், நகராட்சி நிர்வாகம் அக்கடைகளை அகற்றுவதில் தடை நீடித்தது.

இந்நிலையில், நீதிமன்ற தடை உத்தரவு கடந்த சில தினங்களுக்கு முன் நீங்கியதாகத் தெரிகிறது. அதையடுத்து சத்துவாச்சாரி மூன்றாம் நிலை நகராட்சி செயல் அலுவலர் சண்முகம், வேலூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சீத்தாராம் ஆகியோர் தலைமையில், ஆய்வாளர் பழனி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புடன் அக்கடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

 

கொட்டும் மழையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Print PDF

தினகரன்             07.12.2010

கொட்டும் மழையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வேலூர், டிச.7: சத்துவாச்சாரியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் நேற்று கொட்டும் மழையிலும் அகற்றினர். வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ ரோட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறப்பட்டது.

இதை அகற்ற வேண்டும் என நகராட்சி முடிவு செய்தது. இதற்கு ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, சத்துவாச்சாரி நகராட்சி செயல் அலுவலர் சண்முகம் மேற்பார்வையில் ஊழியர்கள் நேற்று காலை 8 மணிக்கு அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையறிந்த கடை உரிமையாளர்கள் அவசர அவசரமாக கடைகளில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அனைத்து கடைகளும் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டன. கடைகளில் இருந்த இரும்பு கூரைகள், மரக்கட்டைகள் உள்ளிட்ட பொருட்களை நகராட்சி லாரி மூலம் ஊழியர்கள் அள்ளிச் சென்றனர்.

இதுகுறித்து செயல் அலுவலர் சண்முகம் கூறியதாவது, ‘சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் ஆக்கிரமித்து 21 கடைகள் கட்டப்பட்டிருந்தன. இதுதொடர்பான வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று (நேற்று) காலை ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டது. இனி ஆர்டிஓ ரோடு அகலப்படுத்தி சாலை அமைக்கப்படும்என்று கூறினார். வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நேற்று அகற்றப்பட்டது. இதனால் சாலை அகலமாக காணப்படுகிறது.

 


Page 43 of 204