Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பெங்களூர் ராஜ்குமார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன்               06.12.2010

பெங்களூர் ராஜ்குமார் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பெங்களூர்,டிச.6: பெங்களூர் ராஜ்குமார் சாலையில் அமைந்துள்ள கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரிகேட் கேட்வே வணிக வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பெங்களூர் ராஜ்குமார் சாலையில் அமைந்துள்ளது பிரிகேட் கேட்அவே என்ற பிரமாண்டமான வணிகவளாகம். இது சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் 800 கோடி செலவில், 1200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுடனும், 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கார் பார்க்கிங் வசதியுடன் அமைக்கப்பட்டது.

கட்டடம் துவங்கப்பட்ட ஆண்டு முதல், இவை கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்து, சட்ட வீதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சி நிலைகுழு தலைவர் ஹெச்.ரவீந்திரா தலைமையிலான நிலைகுழு உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆக்கிரமிப்பு நிலங்களை பார்வையிட்டனர்.

வணிக வளாகம் கழிவு நீர் கால்வாய் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அமைந்துள்ளது தெரியவந்தது. இது தெரிந்தும் கட்டிடம் அமைக்க அப்போது உள்ள மாநகராட்சி அதிகாரில் ஒத்துழைப்பு கொடுத்தது தவறான செயலாகும் என்று கூறிய ரவீந்திரா.

வணிகவளாகத்தை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை ஏற்ற அதிகாரிகள் மற்றும் நிலைகுழு உறுப்பினர்கள் இயந்திரங்களைக் கொண்டு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

ரூ. 3.75 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு

Print PDF

தினமணி             02.12.2010

ரூ. 3.75 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு

கோவை, டிச. 1: கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 3.75 கோடி மதிப்பிலான இடம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கோவை, சக்திரோடு, ஆம்னி பேருந்துநிலையம் எதிரே அலமுநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 51 சென்ட் இடம் உள்ளது. இது தனியார்ஆக்கிரமிப்பில் இருந்தது. கடந்த ஆண்டு 26 சென்ட் ஆக்கிரமிப்பு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். 2 மாடி கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது.

மீதமுள்ள இடத்தையும் சைட் போட்டு விற்க முயற்சி நடந்தது. இதனையடுத்து மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்தவாரம் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்புவந்தது. அதன்படி மீதமுள்ள இடத்தையும் மீட்க மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர்கள் ரவிசந்திரன், ஜோதிலிங்கம், ஆய்வாளர் சந்திரன் மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை சென்று ஆக்கிரமிப்பில் இருந்த 25 சென்ட் இடத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ. 3.75 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 80 சிறிய கடைகள் அகற்றப்பட்டன

Print PDF

தினகரன்               02.12.2010

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 80 சிறிய கடைகள் அகற்றப்பட்டன

புதுடெல்லி, டிச.2: அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 80 சிறிய கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். கிழக்கு டெல்லி லட்சுமி நகர் லலிதா பார்க் அருகே கடந்த 15ம் தேதி 5 மாடிக் கட்டிடம் இடிந்து 70 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஆபத்தான கட்டிடங்களை கண்டறிந்து அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அத்துடன் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களையும் போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி இடித்து வருகிறது.

சிவில் லைன் பகுதியில் மட்டும் ஏற்கனவே அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 16 கட்டிடங்களை மாநகராட்சி இடித்துள்ளது. அங்கு மேலும் 9 வீடுகள் அனுமதி இல்லாமலும் அனுமதியை மீறியும் கட்டப்பட்டு இருந்தன. அந்த கட்டிடங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன் தினம் இடித்தனர். மத்திய டெல்லியில் உள்ள ஆசாத் மார்க்கெட்டை சுற்றிலும் புற்றீசல்போல ஏராளமான கடைகள் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருந்தன. அந்த கடைகளையும் அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.

மார்க்கெட்டைச் சுற்றி வியாபாரம் செய்து கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் வியாபாரிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப சிறிய மற்றும் பெரிய கட்டிடங்களை கட்டி இருக்கின்றனர். இதனால் ராணி ஜான்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளின் வருமானமும் கணிசமாக குறைகிறது.

எனவே அந்த இடத்தில் ஒரு மேம்பாலம் கட்ட அரசு தீர்மானித்துள்ளது. இதனால் அங்கே இருக்கும் சிறிய கடைகளை அப்புறப்படுத்த அரசு தீர்மானித்து. அதன்படி போலீசாரின் உதவியுடன் ஆசாத் மார்க்கெட்டை சுற்றிலும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருந்த சிறிய கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன் தினம் இடித்து தள்ளினார்கள்.

இதுபற்றி மாநகராட்சி கட்டிட அனுமதி பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ஆசாத் மார்க்கெட்டை சுற்றி இருக்கும் சிறிய கடைக்காரர்கள் காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் அவர்கள் எதையும் சட்டை செய்யாமல் இருந்தனர். எனவே மாநகராட்சியின் இடத்தை கைப்பற்ற சிறிய கடைகளை அகற்றினோம்என்றார்.

 


Page 44 of 204