Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

மாநகராட்சியின் 25 சென்ட் நிலம் மீட்பு மனையாக விற்க முயன்றது அம்பலம்

Print PDF

தினகரன்              02.12.2010

மாநகராட்சியின் 25 சென்ட் நிலம் மீட்பு மனையாக விற்க முயன்றது அம்பலம்

கோவை, டிச. 2: கோவை மாநகராட்சியின் 25 சென்ட் நிலம் நேற்று மீட்கப்பட்டது. கோவை சத்தி ரோடு கணபதி அலமு நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது திரவிடம் (ரிசர்வ் சைட்) உள்ளது. இதில் 51 சென்ட் இடம் பல ஆண்டுகளாக எவ்வித பயன்பாடும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், பக்கத்தில் இருந்த ஒரு நபர் இடம் முழுவதையும் ஆக்கிரமித்தார். 26சென்ட் நிலத்தில் 2 அடுக்குமாடி கட்டினார். இந்த கட்டடத்தை கடந்த ஆண்டு மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்த நிலம் மீட்கப்பட்டது. இப்பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. மீதமிரு ந்த 25 சென்ட் நிலம் தொ டர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு முடிந்த நிலையில், நிலத்தை மாநகராட்சி நிர் வாகம் நேற்று மீட்டது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் கள் சவுந்திரராஜன், ஜோதிலிங்கம், சுகா தார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் நிலத்தை மீட்டனர். நிலத்தில் ஆங் காங்கே முட்புதர் வளர்ந்து காணப்பட்டது.

இதனை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினனர். இடத்தை ஆக்கிரமித்த நபர் மனையாக பிரித்து சென்ட் 15 லட்ச ரூபாய் என விற்க முயன்றது தெரியவந்தது. இப்பகுதி இடம், 15 ஆண்டுக ளுக்கு பின்னர் மாநகராட்சி கிடைத்துள்ளது. இதன் மதிப்பு 3.75 கோடி ரூபாய். 51 சென்ட் நிலத்தின் மொத்த மதிப்பு 7.65 கோடி ரூபாய். நகரில் மாநகராட்சி பொது திரவிடங்கள் தனியார் பிடி யில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மாநகராட்சி நிர்வா கம் கடந்த 7 ஆண்டுகளாக, இடத்தை கண்டு கொள்ளா மல் விட்டு விட்டது.

பலர் இன்னும் அரசியல் செல்வாக்குடன் இடத்தை வளைத்து போட்டு பயன்படுத்தி வருகின்றனர். நிலத்தை மீட்காவிட்டால் மனையாக விற்பனை செய்யப்படும் நிலையும் இருக்கிறது. நடப்பாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான 25 இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

 

கொள்ளேகால் நகராட்சியில் ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்ற நோட்டீஸ்

Print PDF

தினகரன்               02.12.2010

கொள்ளேகால் நகராட்சியில் ஆக்கிரமிப்பு கோயில்களை அகற்ற நோட்டீஸ்

கொள்ளேகால்,டிச.2: கொள்ளேகால் பகுதியில் அரசு அங்கீகாரம் பெறாத வீடுகள் மற்றும் கோயில்களை அகற்ற கோரி நகரசபை அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொள்ளேகால் நகரசபைக்கு உள்ளிட்ட பொது இடங்களில் சட்டவிரோமாக ஏராளமான வீடுகள் மற்றும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பாப்பு நகர காலனியை அடுத்து தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள சனீஸ்வரா மற்றும் நவகிரகம், குறுபகேரி ஆதிபராசக்கி, தேங்கப்பேட்டை மாரிகுடி மலிகேமாரம்மா ஆகிய கோயில்களுக்கு நகரசபை அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இது குறித்து நகரசபை துணை கமிஷனர் கூறியதாவது: வீடுகளின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள வடிகால்களை அகற்றி, வீட்டிற்கு பின்புறமாக அமைத்து கொள்ளவேண்டும். கொள்ளேகால் அம்பேத்கர் சாலையிலிருந்து, மாதேஸ்வரா மலை சாலையோரப்பகுதிகளிலும், தாலுகா அலுவலகம் முன்பும் அரசுக்கு சொந்தமாக நிலங்களில் பெட்டிகளை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 18 கோயில்களுக்கு முன்பு பெட்டிகடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்து அரசு குறிப்பிட்டுள்ள தேதிகளில் அகற்றப்பட வேண்டும். மாதேஸ்வரா, புத்தூர் கிராமங்களில் விரிவான சாலைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதன் அடிப்படையில சம்மந்த பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்கு நகரசபை அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று கூறினார்.

 

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்கள் 7ம் தேதிக்குள் அகற்றம்

Print PDF

தினகரன்                  02.12.2010

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்கள் 7ம் தேதிக்குள் அகற்றம்

ஷிமோகா, டிச. 2: ஷிமோகா மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கட்டியுள்ள வழிப்பாட்டு தலங்களை வரும் 7ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இல்லை என்றால் மாவட்ட நிர்வாகம் நவடிக்கை எடுக்கும் என்று கலெக்டர் பொன்னுராஜ் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாவட்ட சுற்றுலா துறையின் ஒத்துழைப்புடன் வரும் 4, 5 தேதிகளில் ஷிமோகா நகரில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் கிருஷ்ணராஜ தேவராயரின் 500வது முடிச்சூட்டு விழாவை முன்னிட்டு நடத்தி வரும் ஒலி,ஒளி காட்சி சுமார் 1 மணி நேரம் நடத்தப்படும். இதில் விஜயநகர பேரரசர்கள் காலத்தில் நடந்த ஆட்சி முறைகளை இக்கால மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஷிமோகாவில் தற் போது கையில் எடுத்துள்ள பணிகள் முடியும் வரை புதிய திட்டம் தொடங்கப்படாது.

மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கட்டியுள்ள வழிப்பாட்டு தலங்களை அகற்றும்படி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் எந்தெந்த வழிபாட்டு தலங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என்பதை பட்டியல் போட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் ஷிமோ கா நகரில் மட்டும் 38 வழிப்பாட்டு தலங்கள் அகற்றும் பட்டியலில் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு 15 கோயில் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மற்ற கோயில்களுக்கு வரும் 7ம் தேதி வரை ஒப்புதல் கொடுக்க காலவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் ஒப்புதல் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இடிக்கப்படும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று மாவட்ட நிர்வாகம் செயல்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

 


Page 45 of 204