Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பஞ்ச்குயான் சாலையில் 180 கடைகள் தரைமட்டம்

Print PDF

தினகரன்            30.11.2010

பஞ்ச்குயான் சாலையில் 180 கடைகள் தரைமட்டம்

புதுடெல்லி, நவ. 30: ராஜீவ் சவுக் நுழைவாயிலில் இருந்து ஜன்டேவாலன் வரையில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. பஞ்ச் குயான் சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 100&க்கும் மேற் பட்ட கடைகளால் சாலையை விரிவுப்படுத்த முடியவில்லை.பஞ்ச் குயான் சாலையில் கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு, கோல் மார்க்கெட் அருகில் மெட்ரோ நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட மார்க்கெட்டில் 100 கடைகளை மாநகராட்சி ஒதுக்கியது. அந்த கடைகள் ஒதுக்கப்பட்ட பிறகும், பஞ்ச் குயான் சாலையில் கடைகளை வியாபாரிகள் காலி செய்யவில்லை. அதோடு, பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவையும் பெற்றனர்.

அதனால், மாநகராட்சியால் கடைகளை இடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சாலையை அகலப்படுத்தி அமைக்கும் பணியும் நடக்கவில்லை. இந்த நிலையில்கடைகளை இடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீதிமன்றங்கள் விலக்கிக் கொண்டன. அதைத் தொடர்ந்து, பஞ்ச் குயான் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் கடைகளை இடிக்கும் பணி தொடங்கியது. மொத்தம் 180 கடைகள் இடித்துத் தள்ளப்பட்டன.

 

ரூ5 கோடி நிலம்: மாநகராட்சி மீட்பு

Print PDF

தினகரன்        30.11.2010

ரூ5 கோடி நிலம்: மாநகராட்சி மீட்பு

சென்னை, நவ. 30: சேத்துப்பட்டில் தனியார் ஓட்டல் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை மாநகராட்சி அதிரடியாக மீட்டது. அந்த இடத்தில் இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டு ஸ்பட்ரங் ரோட்டில் பாலிமர் ஓட்டல் உள்ளது. இதன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 2,550 சதுர அடி நிலம் உள்ளது. இந்த இடத்தை ஓட்டல் நிர்வாகம் ஆக்கிரமித்து, ஜூஸ் கடை மற்றும் கழிவறை கட்டியிருந்தது.

இந்த இடத்தை மாநகராட்சி மீட்க முயன்றபோது, ஓட்டல் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது. இந்த தடை உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் 30 பேர், ஜேசிபி இயந்திரத்துடன் அந்த ஓட்டலுக்கு சென்றனர். ஜூஸ் கடை, கழிவறையை இடித்து தள்ளி இடத்தை மீட்டனர். இடிபாடுகள் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சிஎம்டிஏ அதிரடி அனுமதி பெறாமல் கட்டிய பெட்ரோல் பங்குக்கு ‘சீல்’

Print PDF
தினகரன்           30.11.2010

சிஎம்டிஏ அதிரடி அனுமதி பெறாமல் கட்டிய பெட்ரோல் பங்குக்கு சீல்

ஆலந்தூர், நவ. 30: உள்ளகரம்&புழுதிவாக்கம் நகராட்சிக்குட்பட்ட மேடவாக்கம் சாலையில் 4 ஆயிரம் சதுர அடியில் ஒருவர் பெட்ரோல் பங்க் கட்டுகிறார். இதற்கு நகராட்சி, சிஎம்டிஏ அனுமதி எதுவும் பெறவில்லை. இதனால் இந்த பணியை நிறுத்த நகராட்சிக்கு சிஎம்டிஏ உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, உள்ளகரம்&புழுதிவாக்கம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தினகரன், செயல் அலுவலர் கிரிஜா, இன்ஜினீயர் வைதியலிங்கம் ஆகியோர் அவசர சட்டம் 2007&ன் கீழ் இந்த பெட்ரோல் பங்க் கட்ட தடை விதித்து பங்குக்கு "சீல்" வைத்தனர்.

ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட நேரு காலனி 12&வது தெருவில் முனியபிள்ளை என்பவர், குடியிருப்பு கட்டிடம் கட்ட மட்டும் அனுமதி பெற்றிருந்தார். அதற்கு மாறாக, 6 கடைகள் கட்டி வணிக வளாகமாக மாற்றினார். இதையடுத்து இந்த கட்டிட பணியை நிறுத்த சிஎம்டிஏ, ஆலந்தூர் நகராட்சி ஆணையர் மனோகரன் உத்தரவின் பேரில், அந்த கட்டிடத்துக்கும் நேற்று "சீல்" வைக்கப்பட்டது 

உள்ளகரம் பகுதியில் கட்டிட வரைபட அனுமதியின்றி கட்டப்படும் பெட்ரோல் பங்குக்கு, சிஎம்டிஏ உத்தரவின்படி நகரமைப்பு ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

Last Updated on Tuesday, 30 November 2010 05:37
 


Page 46 of 204