Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

மேம்பால பணிக்கு இடையூறு டிசம்பர் 9ம் தேதிக்குள் வழிபாட்டு தலம் அகற்றம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன்                  19.11.2010

மேம்பால பணிக்கு இடையூறு டிசம்பர் 9ம் தேதிக்குள் வழிபாட்டு தலம் அகற்றம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

மணப்பாறை, நவ. 19: மணப்பாறையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக ரயில்வே கேட் மூடப்பட்டு பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. கேட் மூடப்பட்டதையொட்டி பாலப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலையோரம் உள்ள வழிபாட்டு தலங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மணப்பாறை தாலுகா அலுவகத்தில் தாசில்தார் லீலாவதி தலைமையில் மத சம்பந்தபட்ட முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நாசர் முகமது, பாஸ்கர், பவுல் ரத்தினம், பாஜ மாவட்ட துணை தலைவர் குமரவேல், பொன்னுச்சாமி, ராஜா, பிச்சை, செல்வராஜ், சீனிவாசன், சிம்சன், முருகன், குப்புசாமி முக்கிய உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணி, உதவி பொறியாளர் மனோகரன், நகராட்சி ஆணையர் அருணாசலம், வருவாய் ஆய்வாளர் முனுசாமி, சிறப்பு எஸ்ஐ அந்தோணி, அறநிலையத்தறை, மின் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுத்த முடிவின்படி ரங்கவிலாஸ் அருகிலுள்ள விநாயகர் கோயில், பாணி மஸ்தான் தர்கா, புதுத்தெரு விநாயகர்கோயில், மதுரை ரோட்டில் உள்ள பாத்திமா கோயில், சிலுவைத்திண்ணை, விநாயகர்கோயில், கோவில்பட்டி ரோட்டில் உள்ள விநாயகர்கோயில், விராலிமலை ரோடு விநாயகர் கோயில் போன்று சாலையில் போக்குவரத்து இடையூறாக உள்ள மத வழிபாட்டு தலங்களை டிசம்பர் 9ம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் அகற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில் நெடுஞ்சாலை சார்பில் அவை அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

தினகரன் செய்தி எதிரொலிபுதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் 40 பைக்குகள் பறிமுதல்

Print PDF

தினகரன்              19.11.2010

தினகரன் செய்தி எதிரொலிபுதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் 40 பைக்குகள் பறிமுதல்

தஞ்சை, நவ.19: தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பிளாட்பாரங்களில் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்கது தஞ்சை நகர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் முகமாக அமைந்துள்ளது தஞ்சை புதிய பஸ் நிலையம். ஆனால், இப்புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் பொருள் வைப்பறை குளிர்பான கடையாக மாறியிருந்தது. பயணிகள் சென்றுவருவதற்கான பிளாட்பாரங்களை பழக்கடைகள் ஆக்கிரமித்திருந்தன. அதுமட்டுமின்றி பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் அதிரித்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டுமென கடந்த 16ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார். அதை தொடர் ந்து, தஞ்சை நகராட்சி கமிஷனர் நடராஜன் உத்தரவுப்படி உதவி நகர அமைப்பு அலுவலர் மனோகரன் தலைமையில் நகர அமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 40 கடைகள் அகற்றப்பட்டன. பயணிகள் அமருமிடம் மற்றும் பிளாட்பாரத்தில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த 40 பைக்குகளும் நகராட்சி லாரிகளில் ஏற்றப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதில் 4 பைக்குகளில் காவல் என்று எழுதப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், புதிய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அனுமதியின்றி பயணிகள் அமருமிடம் மற்றும் பிளாட்பாரங்களி¢ல் நிறுத்தப்பட்டிருந்த 40 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள. பைக்குகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பைக்குகளின் ஆர்சி புத்தகம், உரிமையாளர் என்பதற்கான சான்றுடன் வந்தால் மட்டுமே பைக்குகள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

 

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Print PDF

தினகரன்                19.11.2010

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

துரைப்பாக்கம், நவ. 19: பக்கிங்ஹாம் கால்வாய் ஓரம் தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அடையாறு கஸ்தூரிபாய் நகர் முதல் திருவான்மியூர் வரை 1 கி.மீ.க்கு ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறையினரும் ஜேசிபி இயந்திரத்துடன் நேற்று அங்கு வந்தனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட 103 வீடுகள் அகற்றப்பட்டன. அவர்களுக்கு டோக்கன் வழங்கி, துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அவர்களின் பொருட்களை லாரிகளில் ஏற்றி அங்கு அனுப்பி வைத்தனர்.

 


Page 50 of 204