Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தினமணி                 11.11.2010

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

மதுரை, நவ.10: மதுரை நகரில் முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றன. இதைத் தொடர்ந்து பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல் போன்ற பகுதிகளில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மாநகராட்சியின் முக்கியச் சாலைகள் மற்றும் கடைகளின் முன் விளம்பரப் போர்டுகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வரப்பெற்றன. அதன்பேரில், தெற்கு மண்டலத்திற்கு உள்பட்ட பெரியார் பஸ் நிலையத்தில்

பயணிளுக்கு இடையூறாக நடைமேடைகளில் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகள், கட்டபொம்மன் சிலையில் இருந்து சேதுபதி பள்ளி, மாடர்ன் ரெஸ்டாரண்ட் சாலை, சிம்மக்கல், யானைக்கல், வக்கீல் புதுத்தெரு ஆகிய பகுதிகளில், தீபாவளி பண்டிகைக்காக வைக்கப்பட்ட விளம்பரப் போர்டுகள் மற்றும் சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பழக்கடைகள் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு பொருள்கள், கடைகளின் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி              11.11.2010

திருவண்ணாமலை மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை, நவ.10: கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாட வீதிகளில் நகராட்சி மற்றும் காவல் துறையினர் ஆக்கிரமிப்புகளை புதன்கிழமை அகற்றினர்.

சுவாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் நடைபெறும் 4 மாட வீதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதால் இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. தேரடி வீதி, திருவூடல் தெரு, கல்லக்கடை மூலை, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. டவுன் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

ஆக்கிரமிப்புக்களை தாங்களே அகற்ற நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Print PDF

தினமலர்                 11.11.2010

ஆக்கிரமிப்புக்களை தாங்களே அகற்ற நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடன் அகற்றிக் கொள்ள வேண்டும், என நகராட்சி கமிஷனர் சங்கரன் தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள கடைகளில் ஆங்காங்கு நெடுஞ்சாலைத்துறை சாலையை ஆக்கிரமித்து கொட்டகை, விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. உடன், வணிகர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள வேண்டும். அல்லது, நகராட்சி நிர்வாகம், போலீஸார், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆக்கிரமிப்பு அகற்றும்போது, சாலையில் உள்ள பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டால் நீதிமன்றம் மூலம் அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும், என கமிஷனர் சங்கரன் தெரிவித்தார்.

 


Page 52 of 204