Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

பயணிகளுக்கு இடையூறாக இருந்த புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினகரன்                  09.11.2010

பயணிகளுக்கு இடையூறாக இருந்த புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுக்கோட்டை, நவ.9: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூராக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை சுற்றியிலும் நகராட்சி கடைகள் உள்ளன. ஆனால் அக்கடைகளின் வெளியே பயணிகள் நடைபாதையில் நடந்து செல்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கடைகள் போட்டுள்ளதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் தலைமையில் நேற்று புதிய பேருந்து நிலையத்தை சுற்றிலும் ஆக்கிரமித்து 3 அடி வரை நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. மேலும் தள்ளுவண்டி பழக்கடைகளும் அகற்றப்பட்டன.

Last Updated on Tuesday, 09 November 2010 07:19
 

மாநகராட்சி அதிரடி நடவடிக்கை தடையை மீறி ஒட்டப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

Print PDF

தினகரன்                  09.11.2010

மாநகராட்சி அதிரடி நடவடிக்கை தடையை மீறி ஒட்டப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

சென்னை, நவ.9: சுவர்களில் ஒட்டப்பட்ட டிஜிட்டல் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள், மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று அகற்றினர்.

கிண்டி மேம்பாலம் அருகே தனியார் கட்டிடம் ஒன்றில் ஒட்டியிருந்த டிஜிட்டல் பேனர்களை, மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று தார் பூசி அழித்தனர்.

இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

மெரினா கடற்கரையில் காமராஜர் சாலை, அண்ணாசாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் திருவொற்றியூர் நெடுஞ் சாலையிலும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவரில் விளம்பரம் எழுதுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநகராட்சி சொந்தமான கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என சுமார் 4 ஆயிரம் கட்டிடங்களிலும் மற்றும் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளிலும் போஸ்டர் ஒட்டவும், விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த இடங்களில் உள்ள கட்டிடங்களில் ஒட்டப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்ற கெடு முடிந்ததால், அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். சில இடங்களில் பேனர்கள் மீது தார் பூசியும் அழித்து வருகின்றனர்.

தமிழ்நாடு திறந்த வெளி இடங்களில் அழகை கெடுத்தல் தடுப்புச் சட்டம் 1959ன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அபராதமும் விதிக்கப்படும். பேனர்கள் அகற்றப்படுவதற்கான செலவும் கட்டிட உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும். சுமார் 250 இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு மேயர் கூறினார்.

 

சென்னையில் டிஜிட்டல் பேனர்கள்: மேயர் நேரில் பார்வையிட்டு அகற்றினார்

Print PDF

தினமணி                 08.11.2010

சென்னையில் டிஜிட்டல் பேனர்கள்: மேயர் நேரில் பார்வையிட்டு அகற்றினார்

சென்னை, நவ.8: சென்னை கிண்டியில் மேம்பாலம் அருகில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களை மேயர் மா.சுப்ரமணியனம் இன்று நேரில் பார்வையிட்டு அகற்றினார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கட்டடங்களில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தி அதில் டிஜிட்டல் பேனர்கள் ஒட்டப்பட்டு, விளம்பரங்கள் மேற்கொள்வதை அகற்ற மாநகராட்சி சார்பில் நேற்று இறுதிக்கெடு விதிக்கப்பட்டு, அகற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இன்று மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கிண்டி மேம்பாலம் அருகில் உள்ள கட்டடங்களில் ஒட்டப்பட்ட தனியார் விளம்பரங்கள் தார் பூசி அழிக்கப்பட்டன.

இப்பணியினை பார்வையிட்டு மேயர் கூறுகையில், சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, திருவெற்றியூர் நெடுஞ்சாலை என நான்கு பிரதான சாலைகளிலும், 250 பாலங்கள், சுரங்கப்பாதைகளிலும், மாநகராட்சி பூங்காக்கள், கட்டடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கட்டடங்கள் என 3 ஆயிரத்து 464 கட்டடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவர் விளம்பரங்கள் வரைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது புதிய வடிவத்தில் கட்டடங்களில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, டிஜிட்டல் பேனர்கள் ஒட்டப்பட்டு, விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே சென்னை மாநகரின் அழகை சீர்குலைக்கும் அந்த டிஜிட்டல் பேனர்கள் இன்று முதல் சென்னையில் உள்ள 10 மண்டலங்களிலும் அகற்றப்படும் என மேயர் தெரிவித்தார்.

 


Page 54 of 204