Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

வீதியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் 41 ஆண்டுக்கு பிறகு நகராட்சி அகற்றியது

Print PDF

தினகரன் 27.10.2010

வீதியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் 41 ஆண்டுக்கு பிறகு நகராட்சி அகற்றியது

பவானி, அக். 27: பவானியில் உள்ள பழனிபுரம் 4 வது வீதியில் சுகாதார சந்து என்ற குறுக்கு வீதி 41 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளது. இந்த வீதியை அப்போதே வீதியின் இருபுறமும் வசித்தவர்கள் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியும் வீடுகளாக மாற்றிக்கட்டியும் ஆக்கிரமித்தனர்.

இது குறித்து தற்போது மாவட்ட நிர்வாகத்துக்கு இது தொடர்பாக புகார்கள் வந்தது. இதையடுத்து மாயமான வீதியை ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் உருவாக்க கலெக்டர் சவுண்டய்யா உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை பவானி நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

நகராட்சி ஆய்வாளர் பேச்சிமுத்து, நகரமைப்பு ஆய்வாளர் (பொறுப்பு) சீனிவாசன் ஆகியோர் தலைமையில் சுகாதார அலுவலர் பாலகுமாரராஜா, ஆர்ஐ சண்முகசுந்தரம் விஏஓ ருத்ரசெல்வன் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றினர். 6 அடி அகலம், 120 அடி நீளத்துக்கு குறுக்கு வீதி மீண்டும் தோன்றியது. ஆக்கிரமிப்பை அகற்றியபோது போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

குறுக்கு வீதியையே மறந்திருந்த அப்பகுதி மக்கள், இதுவரை முக்கியத் தெருவைச் சென்றடைய சற்று தூரம் சுற்றித்தான் சென்று வந்து கொண்டிருந்தனர்.

தற்போது குறுக்கு வீதி வழியாக நேரடியாக மெயின் தெருவை அடைய முடியும் என்பதால் அப்பகுதி மக்கள், அரசின் நடவடிக்கைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

ராசிபுரம் பகுதியில் விளம்பர பேனர்கள் அமைக்க திடீர் தடை

Print PDF

தினகரன் 25.10.2010

ராசிபுரம் பகுதியில் விளம்பர பேனர்கள் அமைக்க திடீர் தடை

ராசிபுரம், அக்.25: ராசிபுரம் பகுதியில் விளம்பர டிஜிட்டல் பேனர்கள் அமைக்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிருப்பதாவது:

ராசிபுரம் நகரில் சேலம் சாலை, நாமக்கல் சாலை, ஆத்து£ர் சாலை நகரின் மையப்பகுதிகள், அரசு மருத்துவமனை, காவல்நிலையம், அரசு கல்லு£ரி, அரசு அலுவலகம், நீதி மன்றம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட நகராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் அரசியல் கட்சியினர், தனியார் பள்ளி, தனியார் தொழில் நிறுவனத்தினர் ஆங்காங்கே சிறிய மற்றும் மெகா சைஸ் விளம்பர டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். அதனால் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆட்சியர் மதுமதி உத்தரவிட்டுள்ளார்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே ராசிபுரம் பகுதியில் எவ்வித டிஜிட்டல் பேனர்களும் அமைக்ககூடாது. இதனை மீறி பேனர்கள் வைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டிஜிட்டல் விளம்பர பேனர்களை அகற்றவும், அதற்கான செலவுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

பெரம்பலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் கலந்தாய்வு கூட்டம்

Print PDF

தினமலர் 25.10.2010

பெரம்பலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில் உள்ள சமுதாயக்கூட கூட்டமன்றத்தில் நடந்தது. பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுற்றுசூழலினை மேம்படுத்துதல், சுகாதாரத்தை பேணிக்காத்தல் ஆகியவைகள் தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம் பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில் உள்ள சமுதாயக்கூட கூட்டமன்றத்தில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் பெரம்பலூர் தாசில்தார் கார்த்திக்கேயன், புது பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவர் வைத்தீஸ்வரன், பழைய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவர் சரவணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஞானமூர்த்தி பங்கேற்றனர்.

 


Page 56 of 204