Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

கொரட்டூரில் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

Print PDF

தினமலர் 14.10.2010

கொரட்டூரில் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

அம்பத்தூர் : கொரட்டூர் பஸ் நிலையம் அருகே, நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீட்டை நகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.கொரட்டூர் பஸ் நிலையம் அருகே, அம்பத்தூர் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டிருந் தன.இந்த இடத்தை மீட்க நகராட்சி முடிவு செய்தது. நகராட்சி கமிஷனர் ஆஷிஷ் குமார் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீட்டை இடித்தனர். மீட்கப்பட்ட இந்த இடத்தின் மதிப்பு 50 லட்ச ரூபாய்.

 

அயப்பாக்கம் - திருவேற்காடு சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமலர் 12.10.2010

அயப்பாக்கம் - திருவேற்காடு சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

அயப்பாக்கம்: அயப்பாக்கம் - திருவேற்காடு சாலையில், ஆக்கிரமிப்பு செய்து கட்டி இருந்த வீடுகள் நேற்று அகற்றப்பட்டன. அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் - திருவேற்காடு வரை 7 கிலோ மீட்டர் தூரம், சாலை அகலப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்திருந்த வீடுகளை அகற்ற, கடந்த ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் அனுப்பினர். கடந்த மாதமும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த வீட்டு உரிமையாளர்களுக்கு மேலும் ஒரு நோட்டீஸ் மூலம், ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறினர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் வீடுகளை இடித்துத் தள்ளினர். இதையடுத்து, ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப் பட்டனர்.

 

பாப்பாரப்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமலர் 08.10.2010

பாப்பாரப்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியில் போக்குவரத்து இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் கடந்த இரு நாட்களாக அகற்றப்பட்டது.பாப்பாரப்பட்டி நகரில் குறுகிய சாலை வசதிகள் உள்ளது. இந்த சாலையிலும் பெரும் அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக நடைபாதை கடைகள் அதிக அளவில் இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி சிறு விபத்துக்கள் நடந்து வந்தது.

ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து சமீபத்தில் டவுன் பஞ்சாயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து கட்சியும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்நிலையில், நெடுஞ்சாலை துறையினர் டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கடந்த இரு நாட்களாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி வருகின்றனர். பென்னாகரம், ரோடு, பாலக்கோடு ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதி ஆகிய இடங்களில் கடந்த இரு நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றினர். இன்றும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடக்கிறது.

 


Page 59 of 204