Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

ஒரே நாளில் மாநகராட்சி அதிரடி ரூ200 கோடி மதிப்புள்ள 52 கிரவுண்ட் நிலம் மீட்பு

Print PDF

தினகரன் 04.10.2010

ஒரே நாளில் மாநகராட்சி அதிரடி ரூ200 கோடி மதிப்புள்ள 52 கிரவுண்ட் நிலம் மீட்பு

சென்னை, அக்.4: தேனாம்பேட்டை அண்ணா சாலை உட்பட 14 இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ200 கோடி மதிப்புள்ள 52 கிரவுண்ட் நிலம் நேற்று ஒரே நாளில் மீட்கப்பட்டது.சென்னையில் பெரிய குடியிருப்பு, வணிக வளாகங்கள் கட்டும்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) விதிகளின்படி குறிப்பிட்ட அளவு திறந்தவெளி நிலத்தை (ஓஸ்எஸ்ஆர்) மாநகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும்.

இப்படி ஒதுக்கப்பட்ட நிலங்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கை, மாநகராட்சியால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் உள்ள ஹயாத் நிறுவனத்திடமிருந்து சுமார் எட்டரை கிரவுண்ட் நிலத்தை, மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கையகப்படுத்தினர்.அந்த இடத்தில் "மாநகராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி நிலம்" என பெயர் பலகை வைக்கப்பட்டது.

இதுகுறித்து மேயர் கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ3,500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, பூங்காக்கள் அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அடையாறு மண்டலத்தில் 26 இடங்களில் ரூ300 கோடி மதிப்புள்ள 136 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டது.

இன்று (நேற்று) மண்டலம் 8ல் தி.நகர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம், சாலிகிராமம் போன்ற 14 இடங்களில் 52 கிரவுண்ட் நிலம் தனியாரிடமிருந்து மாநகராட்சி கையகப்படுத்தி உள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள இந்த இடம் சுமார் எட்டரை கிரவுண்ட். இது, ரூ50 கோடியாகும். இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்படும். இந்த இடத்தில் ஆக்கிரமித்து வைத்துள்ள கட்டுமான பொருட்கள் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கோயில் ஆகியவற்றை ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று ஹயாத் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 14 இடங்களில் 52 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 200 கோடி. எந்தெந்த இடங்களில் ஓஎஸ்ஆர் நிலங்கள் ஒப்படைக்காமல் இருக்கிறது என்று மாநகராட்சி விழிப்புணர்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கும். இவ்வாறு மேயர் தெரிவித்தார். தலைமை பொறியாளர் முருகேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மீட்கப்பட்ட நிலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம்என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

 

ஆக்கிரமிப்பு அகற்றம்: நடைபாதை பணி துவக்கம்

Print PDF

தினமலர் 01.10.2010

ஆக்கிரமிப்பு அகற்றம்: நடைபாதை பணி துவக்கம்

கோத்தகிரி:கோத்தகிரி மார்க்கெட் சாலையோரம், நடைபாதை அமைக்கும் பணி, நேற்று துவக்கப்பட்டது.

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்டில் இருந்து மார்க்கெட் செல்லும் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு, சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், பேரூராட்சி பொது நிதியான 10 லட்சத்தில் சாலை, நடைபாதை அமைக்கப்பட்டது; பணிகள் பாதியின் விடப்பட்டன.பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என,கோத்தகிரியில் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேரூராட்சித் தலைவர் போஜன், துணைத் தலைவர் செந்தில் ரங்கராஜ், தலைமை எழுத்தர் நடராஜ் முன்னிலையில், நேற்று, பணிகள் நடத்தப்பட்டன. சாலையோரம் எஞ்சியிருந்த ஆக்கிரமிப்பு படிகட்டுகள், ஜேசிபி., வாகனத்துடன் அகற்றப்பட்டு, உடனுக்குடன் நடைபாதை அமைக்க, தளம் சமன்படுத்தப்பட்டது.

பணிகள் முடிந்தால், சாலையின் அகலம் அதிகரிக்கப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Friday, 01 October 2010 11:38
 

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி பாளை மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 28.09.2010

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி பாளை மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாளை மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

நெல்லை, செப். 28: பாளை மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த நடைபாதை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மாநகராட்சி லாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளை மார்க்கெட்டில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இங்கு காய்கறி, பலசரக்கு, பழக்கடை உள்ளிட்ட பல் வேறு கடைகள் உள்ளன.

இக்கடைகளை தவிர பொதுமக்கள் சென்றுவரும் நடைபாதையில் சிலர் அனுமதியின்றி கடைகளை வைத்து விற்பனை செய்துவந்தனர். இதனால் உள்பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியிலும் கடைகளை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திவந்தனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் இளநிலை பொறியாளர்கள் ஜெய்கணபதி, கருப்பசாமி, பைஜூ, சுகாதார ஆய்வாளர்கள் கல்யாணசுந்தரம், சாகுல்ஹமீது, பெரு மாள், உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் மற்றும் முருகன், பாலசுப்பிரமணி யன் ஆகியோர் துப்புரவு பணியாளர்கள் மூலம் மார்க்கெட்டில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைவைத்திருந்தவர்களின் பொருட் களை அகற்றி லாரிகளில் ஏற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரி வித்து வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பறிமுதல் செய்த பொருட்களை தர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி லாரியை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் மற் றும் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அகற்றப்பட்ட பொருட்களை மாநகராட்சியினர் எடுத்துச் சென் றனர்.

இதனால் அப்பகுதி யில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வியாபாரிகள் எதிர்ப்பு கண்டும் காணாமல் சென்ற கமிஷனர்

பாளை மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொருட்களை ஏற்றி சென்ற வேனை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். அவ்வழியாக போலீஸ் கமிஷனர் அபயகுமார் சிங் அதிரடிப்படை வேனில் சென்றார். அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. அதிரடிப்படை வேனிலிருந்த போலீசார் கமிஷனர் வந்த வேன் செல்ல போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதைதொடர்ந்து வியாபாரிகள் அதிகாரிகளின் பிரச்சனையை கண்டும் காணாமல் போலீஸ் கமிஷனர் வேன் பாய்ந்து சென்றது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 


Page 61 of 204