Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விழா பேனர் அகற்றம்

Print PDF

தினமலர் 31.08.2010

விழா பேனர் அகற்றம்

ஊட்டி : ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த, விநாயகர் சதுர்த்தி விழா பேனர் அகற்றப்பட்டது.ஊட்டி ஐந்துலாந்தர் பகுதியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. "பேனருக்கான முறையான அனுமதி வாங்கவில்லை' எனக்கூறி, போலீசார் அகற்ற வந்தனர். இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர், "பேனரை அகற்றக் கூடாது; இதற்கான அனுமதிக்கு டி.எஸ்.பி., யிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது' என கூறினர்; இவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊட்டி நகர திட்ட அலுவலர் சவுந்தரராஜன், "இப்பகுதியில் பேனர் வைக்க, நகராட்சிக்கு அனுமதி கடிதம் வழங்கவில்லை; இதற்கான கடிதம் கொடுத்தால், அனுமதி வழங்கப்படும். பின், பேனர் வைத்துக் கொள்ளலாம்,'' என்றார். இதன்பின் பேனர் அகற்றப்பட்டது.

இந்து முன்னணியின் கோவை, நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கூறுகையில், ""ஊட்டியின் பல இடங்களில், விதிமுறை மீறி, பல மாதங்களாக பேனர் கள் வைக்கப்படுகின்றன; இவைகளை போலீ சார் கண்டுகொள்வதில்லை. டி.எஸ்.பி., அசோக்குமாரிடம் முறையான அனுமதி கடிதம் கொடுத்தும், எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நிர்வாகிகளிடம் ஆலோசித்து, மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட உள்ளோம்,'' என்றார்.

 

ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன் 30.08.2010

ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆர்.எஸ்.மங்கலம், ஆக. 30: ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதியில் ஏராளமான சாலையோர ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார்கள் வந்தன. திருவாடானை தாசில்தார் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினரும். இன்ஸ்பெக்டர் பில்லத்தியான் தலைமையில் போலீசாரும் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆர்எஸ் மங்கலத்தில் உள்ள டி.டி.மெயின்ரோடு, பரம்பைரோடு. நகைக்கடைபஜார். புல்லமடை சாலை. பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். போக்குவரத்திற்கு இடையூறும் செய்யும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால், நேற்று ஆர்எஸ் மங்கலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

கவுன்சிலர் நாகராஜ் பேட்டி பெங்களூர் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு விவர அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்

Print PDF

தினகரன் 26.08.2010

கவுன்சிலர் நாகராஜ் பேட்டி பெங்களூர் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு விவர அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்

பெங்களூர், ஆக. 26: ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி கட்டிடங்களை மீட்பது குறித்து அடுத்த மாதம் மேயருக்கு அறிக்கையளிக்க உள்ளதாக ஆக்கிரமிப்பு அகற்ற கமிட்டியின் தலைவர் நாகராஜ் தெரிவித்தார்.

மேயர் எஸ்.கே.நடராஜ் உருவாக்கியுள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. அதன்பிறகு நாகராஜ் கூறியதாவது:

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி இதுவரை மூன்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. தெற்கு மண்டலத்தில் 40, மேற்கு மண்டலத்தில் 98, கிழக்கு மண்டலத்தில் 62 மாநகராட்சி கட்டிடங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை மாநகராட்சியிடமிருந்து ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ளோர்கள் அந்த ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளாமல் உள்ளனர். எனவே இது சட்டவிரோத ஆக்கிரமிப்பாகவே கணக்கில் கொள்ளப்படும்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் கிடைக்கவில்லை என¢றால் அந்த கட்டிடங்களை மாநகராட்சி மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பின் னி மில்பகுதியில் மாநகராட்சியிடமிருந்து சொந்த பயன்பாட்டுக்காக ஒப்பந்தம்போடப்பட்ட நிறுவனத்தை பிறருக்கு உள்வாடகை கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் வேறு பல கடைகளும் இதேபோல மோசடியாக வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மாநகராட்சியின் முக்கிய சாலைகளிலுள்ள பல மாநகராட்சி கட்டிடங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோறும் முறையாக லைசென்ஸ்சை புதுப்பித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றும் கமிட்டி அமைக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மோசடிகளையும் வெளிக்கொண்டு வருகிறோம். ஆக்கிரமிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். சில பகுதிகளில் மாநகராட்சி கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து அதில் அனுமதியின்றியே தனியார் பள்ளிகளை ஆரம்பித்து அதிக அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் சம்பவங¢களும் தெரியவந்துள்ளன. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி சொத்துக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஒரு அறிக்கை தயாரித்து அடுத்த மாதம் அதை மேயரிடம் அளிக்க உள்ளேன். நில மாபியாக்களின் எந்தவித நெருக்கடிக்கும் நான் அஞ்ச மாட்டேன். மாநகராட்சிக்கு தவறான தகவல்களை அளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும என்றார்.

 


Page 69 of 204