Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

விளம்பர தட்டிகள் அகற்றம்

Print PDF

தினகரன் 26.08.2010

விளம்பர தட்டிகள் அகற்றம்

வால்பாறை, ஆக. 26: வால்பாறை டவுனில் அதிகளவில் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சாலையோரங்களில் கட்சி வேறுபாடின்றி வைக்கப்பட்ட விளம்பர தட்டிகளை நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அப்புறப்படுத்தினர். நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட தட்டிகள் நகராட்சி டிராக்டரில் ஏற்றப்பட்டு, நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. நகராட்சியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். இதனால் சாலை விபத்து குறையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

வால்பாறை நகரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் நேற்று அப்புறப்படுத்தினர்.

Last Updated on Thursday, 26 August 2010 07:18
 

கலெக்டர் ஆஃபீஸ் சாலையில் ஆக்ரமிப்பு கோவில் அகற்றம்

Print PDF

தினமலர் 26.08.2010

கலெக்டர் ஆஃபீஸ் சாலையில் ஆக்ரமிப்பு கோவில் அகற்றம்

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் ஆக்ரமிப்பில் இருந்த இரண்டு கோவில், ஒரு மாதா பீடம் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மாநகராட்சி அகற்றியது. கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர் கருணாநிதி வரும் செப்., 8ம் தேதி திறந்து வைக்கிறார். ஏற்கனவே, சாலைகளை ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த வழிபாட்டு தலங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. கலெக்டர் அலுவலக திறப்பு விழாவுக்கு முதல்வர் வருவதால், சாலையோர ஆக்ரமிப்பு வழிபாட்டு தலங்களை அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, சங்கம் ஹோட்டல் எதிரே இருந்த விநாயகர் கோவில் இடிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த மாதா சிலை ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில், அங்கிருந்த மாதா பீடமும் நேற்று அகற்றப்பட்டது. கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே செல்லும் போது, நுழைவு வாயிலில் இருந்த முனீஸ்வரன் கோவிலும் அகற்றப்பட்டது. பிரச்னையை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வழிபாட்டு தலங்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ரூ. 4 கோடி மாநகராட்சி நிலம் மீட்பு

Print PDF

தினமலர் 26.08.2010

ரூ. 4 கோடி மாநகராட்சி நிலம் மீட்பு

கோவை: சவுரிபாளையம், ராஜிவ் நகரில் ஆக்கிரமிப்பில் இருந்த 50 சென்ட் இடத்தை மாநகராட்சி மீட்டது. ராஜிவ் நகரில், 10 ஏக்கர் பரப்பளவில் நிலம் இருந்தது. 15 ஆண்டுகளுக்கு முன் "ராஜிவ்காந்தி நகர்'என லே- அவுட்டாக மாற்றினர். இதில், 1.91 ஏக்கர் பரப்பளவில் ரிசர்வ் சைட் ஒதுக்கப்பட்டது. ரிசர்வ் சைட்டை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக் காமல், நிலத்தை பங்கீடு செய்து விற்பனை செய்ய கம்பி வேலி அமைத்தனர். அதில் 50 சென்ட் இடத்தை தனியாக காம்பவுண்ட் சுவர் அமைத்து 1000 சதுர அடி பரப்பளவில் வீட்டை கட்டி வசித்து வந்தார். ஒரு பாதியில் 20 சென்ட் இடத்துக்கு கம்பி வேலி அமைத்து தேக்கு, பாக்கு, தென்னை உள்ளிட்ட மரங்களை பயிரிட்டிருந்தார். காய்கறி தோட்டங்களை பயிர் செய்திருந்தார். அங்கு மாடு கன்று கட்டி பால் வர்த்தகமும் செய்துவந்தார். இதற்காக 10 சென்ட் இடத்தில் ஓடு வேயப்பட்ட ஷெட் அமைந்து அங்கு மாடு கன்றுகளை பாதுகாத்து வந்தார். 1.91 ஏக்கர் பரப்பளவிலிருந்த பிரமாண்ட ரிசர்வ் சைட்டில் 50 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து விவசாயமும், வர்த்தகமும் செய்து வந்தார். கோவை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவினர் இந்த இடத்தை கைப்பற்ற சர்வே செய்தனர். ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்திருந்தவருக்கு எச்சரிக்கை நோட் டீஸ் அனுப்பினர். அதிகாரிகள் எச்சரித்ததால், சில தினங்களுக்கு முன் வீட்டை காலி செய்தனர். நகரமைப்புத்துறையினர் காலியாக இருந்த வீட்டை நேற்று கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் நகரமைப்பு பிரிவு சிறப்பு மீட்புக்குழுவினர் வீட்டை இடித்து அப்புறப்படுத்தினர். இது குறித்து நகரமைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரிசர்வ் சட்டை தனிநபரோ, அமைப்போ ஆக்கிரமிப்பு செய்வது தவறு. ஆக்கிரமிப்போர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்வதோடு, மாநகராட்சி சார்பிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்டுள்ள 50 சென்ட் இடத்தின் மதிப்பு நான்கு கோடி ரூபாய்' என்றனர்.

 


Page 71 of 204