Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

வைகை கரையோர ஆக்கிரமிப்பு அகற்ற மேயர் உத்தரவு

Print PDF

தினகரன் 25.08.2010

வைகை கரையோர ஆக்கிரமிப்பு அகற்ற மேயர் உத்தரவு

மதுரை, ஆக. 25: மதுரை வைகை ஆற்றின் கரையோரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் தேன்மொழி உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் தேன்மொழி தலைமை வகித்தார். கமிஷனர் செபாஸ்டின், துணைமேயர் மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொது மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 30க்கு மேற்பட்ட மனுக்களை பெற்ற மேயர் தேன்மொழி கூறுகையில், ‘இம்மனுக்களில் குடிசை வீடுகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றுதல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட மனுக்கள் மீது உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ’என்றார்.

வைகை ஆற்றின் இரு கரையோரங்கலில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மாணிக்கம், தலைமை பொறியாளர் சக்திவேல், நகரமைப்பு அலுவலர் முருகேசன், நகர் நல அலுவலர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் தேவதாஸ், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

காரைக்காலில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம் சப்&கலெக்டர் அதிரடி

Print PDF

தினகரன் 24.08.2010

காரைக்காலில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம் சப்&கலெக்டர் அதிரடி

காரைக்கால், ஆக. 24: காரைக் கால் நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் கோவில் பத்து பகுதியில் வசிக்கும் 35 குடும்பத்தினர் கடந்த மாதம் 26ம் தேதி இலவச மனைப்பட்டா கேட்டு அரசு புறம்போக்கு இடத்தில் குடிசைகள் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து மாவட்ட துணை ஆட்சியர் ஆபெல் ரொசாரியோ மற்றும் போலீசார் குடிசைகளை அகற்ற சென்றபோது, பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு இலவச மனைப்பட்டா வழங்கப்படும் இடத்தை காண்பிக்கும் வரை குடிசைகளை அகற்ற விடமாட்டோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அதிகாரிகள் குடிசைகளை அகற்றும் பணியை கைவிட்டனர்.

பின்னர் காரைக்காலுக்கு வந்த புதுவை சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி மேற் கண்ட குடிசைகளை பார்வையிட்டு விரைவில் அனைவருக்கும் இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தும் பொதுமக்கள் குடிசைகளை காலி செய்ய மறுத்துவிட்டனர்.இவர்களை தொடர்ந்து காரைக்காலை அடுத்த நெடுங்காடு வடமட்டம் அம்பேத்கர் நகர், எம்.ஜி.ஆர் தெரு, வாதிகுடியிருப்பு உள் ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 25 குடும்பத்தினர் கடந்த 17ம் தேதி திடீரென நெடுங்காடு& காசாகுடி சாலையில் குடி சைகள் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மறு நாள் (18ம் தேதி) காரைக் காலை அடுத்த நெடுங்காடு மேலகாசாகுடி வடபாதி கிராத்தைச் சேர்ந்த 15 குடும்பத்தினர் இலவச மனைப்பட்டா கேட்டு நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு புறம்போக்கு இடத்தில் திடீ ரென குடி சைகள் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாவட்ட துணை ஆட்சியர் ஆபெல்ரொசாரியோ நேற்று 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று கோவில்பத்து பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் போட்ட குடிசை களை அதிரடியாக காலி செய்தார். பின்னர் நெடுங் காடு&காசாகுடி சாலையில் உள்ள 25 குடிசைகளை அகற்ற சென்ற போது, குடிசைவாசிகள் மற்றும் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுசெயலர் வணங்கா முடி, மாநில செயலாளர் செந்தமிழ்செல்வம் தலை மையில் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் பொக்லைன் எந்திரம் முன் சாலையின் குறுக்கே படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மோகன் கூடுதல் போலீசாருடன் சென்று குடிசைகளை அகற்றினர்.

பின்னர் இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் ஆபெல்ரொசாரியோ கூறுகை யில் அரசு புறம்போக்கு இடத்தில் அத்துமீறி குடிசை கள் போடுவது தவறான உதாரணம். இதனை மாவட்ட நிர்வாகம் ஒரு போதும் அனுமதிக்காது. இதனால் தான் 3 இடத்தில் அத்துமீறி போடப்பட்டிருந்த 75 குடிசைகளை அதிரடியாக அகற்றியுள்ளோம். இனி இதுபோன்று குடிசை போடும் போராட்டத்தில் யாராவது ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

 

ஆக்கிரமிக்கப்பட்ட 39.05 ஏக்கர் மாநகராட்சி நிலம் மீட்பு கோவை, ஆக 20:

Print PDF

தினகரன் 20.08.2010

ஆக்கிரமிக்கப்பட்ட 39.05 ஏக்கர் மாநகராட்சி நிலம் மீட்பு கோவை, ஆக 20:

கோவை மாநகராட்சியின் 78 கோடி ரூபாய் மதிப்பிலான 39.05 ஏக்கர் நிலம் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டது. கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் இடம் உள்ளது. மாநகராட்சியின் குப்பை கிடங்கு இங்கே செயல்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 100 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கை ஒட்டியுள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து வருவதாக தெரியவந்தது.

நேற்று முன் தினம் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா குப்பை கிடங்கில் ஆய்வு நடத்தினார். அப் போது மாநகராட்சி இடத்தில் தனியார் அத்துமீறி நுழைந்து வேலி அமைத்து மனை பிரிவு உருவாக்கியிருப்பதை கண்டறிந்தார்.

உடனடியாக இடத்தை மீட்கவேண்டும் என உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து மாநகராட்சி செயற்பொறியா ளர் லட்சுமணன், உதவி செயற் பொறியாளர் சரவணக்குமார், நகரமைப்பு அலுவலர் சவுந்திரராஜன், உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஜோதிலிங்கம், புவனேஸ்வரி, ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் 78 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இடத்தை தனியார் ஆக்கிரமித்து விட்ட தாக தெரிகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மீட்கப்பட்ட இடத்தை தனியார் சொசை ட்டி நிர்வாகம் கேட்டது. ஆனால் மாநகராட்சி தரப் பில் இடம் தர மறுக்கப்பட் டது. சொசைட்டி நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தது.

வழக்கில் மாநகராட்சி க்கு இடம் சொந்தம் என குறிப்பிடப்பட்டது. இருப்பினும் அந்த சொசைட்டி நிர்வாகம் அரசுக்கு எழுதி இடத்தை கேட்டு கொண்டே இருந்தது. உயரதிகாரிகள் ஆய்வு செய்து திடக்கழிவு திட்டத்திற்கு இடம் தேவை என தெரிவித்து விட்டனர்.

இந்த நிலையில் தான் ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது. இடத்தை மீட்டு விட்டோம். இனி எந்த சிக்கலும் இல்லை, " என்றனர்.

கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரத்தில் தனியாரால் ஆக்கிரமிக் கப்பட்ட மாநகராட்சி இடத்தை அதிகாரிகள் நேற்று மீட்டு போர்டு வைத்தனர்.

 


Page 72 of 204